ஒப்போ K3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 23 முதல் இந்த போன், இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும். கேம்பூஸ்ட் 2.0, டிசி டிம்மிங் உள்ளிட்ட வசதிகளுடன் வந்துள்ள இந்த K3, கேமிங்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இளைஞர்களை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனில் அதிவேக சார்ஜிங்கிற்காக VOOC 3.0 சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஒப்போ K3, விவோ V15, ரியல்மீ X மற்றும் ரெட்மீ K20 போன்களுக்குப் போட்டியாக இருக்கும்.
ஒப்போ K3 விலை, ஆரம்ப ஆஃபர்கள்:
K3-யின் 6ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வகை 16,990 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வகை, 19,990 ரூபாய்க்கு விற்கப்படும். அமேசான் தளத்தின் மூலம் வரும் 23 ஆம் தேதி முதல் இந்த போனை வாங்கலாம். அரோரா ப்ளூ மற்றும் ஜேட் கருப்பு நிறங்களில் இந்த போனைப் பெற முடியும்.
அமேசான் பே மூலம் இந்த போனை வாங்குபவர்களுக்கு 1000 ரூபாய் கேஷ்-பேக் கொடுக்கப்படும். அதேபோல ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி இந்த போனை வாங்கினாலும் 1000 ரூபாய் உடனடி கேஷ்-பேக் கொடுக்கப்படும். இந்த போனை வாங்குபவர்களுக்குக் கூடுதலாக 7,050 மதிப்புள்ள ஜியோ, லென்ஸ்கார்ட் பரிசு வவுச்சர் மற்றும் ஓயோ வவுச்சர் கூப்பன்கள் வழங்கப்படும். நோ காஸ்ட் இ.எம்.ஐ வசதியும் உள்ளது.
ஒப்போ K3 சிறப்பம்சங்கள்:
இரண்டு நானோ சிம் வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. 6.5-இன்ச் அளவிலான FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம் என்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன், இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் ப்ரின்ட் சென்சாரையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் செல்பி கேமராவை கொண்டுள்ளது. பின்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் கேமரா என இரண்டு கேமராக்களை பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 3,765mAh அளவிலான பேட்டரியையும் கொண்டுள்ளது.
இந்த போனில் கூடுதலாக, ஏ.ஐ போர்ட்ரெய்ட் மோட் மற்றும் ஏ.ஐ சீன் டிடெக்ஷன் வசதி உள்ளது. இரவு நேரங்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள் தெளிவாக இருக்க, அல்ட்ரா க்ளியர் நைட் வியூ 2.0 வசதியும் பொருத்தப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்