Oppo K1 மற்றும் Oppo R15 Pro-வுக்கான ColorOS 6 அப்டேட்டை Oppo வெளியிட்டுள்ளது. Oppo K1 மற்றும் Oppo R15 Pro இதுவரை Android Oreo-ல் சிக்கியிருந்தன. ஆனால் புதிய ColorOS 6 அப்டேட் இறுதியாக தங்கள் மென்பொருளை Android Pie-க்கு மேம்படுத்தும். இந்த மேம்படுத்தல் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட UI முதல் Hyper Boost, new gestures, upgraded Game Space, camera improvements, flash on call alert, screen colour mode மற்றும் Riding Mode போன்ற புதிய அம்சங்களைச் சேர்ப்பது வரை ஒரு டன் காட்சி மற்றும் செயல்பாட்டு மாற்றங்களைக் கொண்டுவருகிறது.
Oppo K1 மற்றும் Oppo R15 Pro-வுக்கான Android Pie-அடிப்படையிலான ColorOS 6 அப்டேட் ஜனவரி 1-ஆம் தேதி நிலையான சேனல் வழியாக வெளியிடப்பட்டது என்று அதிகாரப்பூர்வ ஒப்போ மென்பொருள் அப்டேட் மன்றம் குறிப்பிடுகிறது. இந்த அப்டேட் ஒரு அரங்கேற்றமாக வெளியிடப்படுகிறது என்று கேஜெட்ஸ் 360 ஒப்போவிடமிருந்து கற்றுக் கொண்டது. Oppo K1-க்கான புதிய அப்டேட் CPH1893EX_11_C.32 என்ற பில்ட் எண் மற்றும் 2.59GB அளவைக் கொண்டுள்ளது. அதே சமயம் Oppo R15 Pro-வுக்கு CPH1831EX_11_C.32 என்ற பில்ட் எண் உள்ளது மற்றும் 2.98GB அளவு கொண்டது. பாதுகாப்பு இணைப்பு அளவை ஒப்போ குறிப்பிடவில்லை. ஆனால், ColorOS 6 அப்டேட் டிசம்பர் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைக் கொண்டுவருகிறது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.
Oppo K1 மற்றும் Oppo R15 Pro போன்களுக்கான ColorOS 6 அப்டேட்டின் சேஞ்ச்லாக் ஒரே மாதிரியானது. புதிய அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த அப்டேட் புதிய UI வடிவமைப்பைக் கொண்டுவருகிறது. இது bezel-less screens-க்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டு புதிய தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. இந்த அப்டேட் Hyper Boost-ஐ மேம்படுத்துகிறது. மேலும், பின்னடைவைக் குறைப்பதற்கான Game Boost 2.0, ஒட்டுமொத்த மென்மையான UI navigation experience-ற்கான System Boost மற்றும் செயலிகளின் செயல்திறனை மேம்படுத்த App Boost ஆகிய மூன்று புதிய கூறுகளை அறிமுகப்படுத்துகிறது. Game Space ஒரு புதிய தோற்றத்தையும் பெற்றுள்ளது. மேலும், கேம் பிளே ஸ்கிரீன் ஷாட்கள் மற்றும் திரை பதிவுகளைச் சேமிப்பதற்கான My Games Moments hub-ஐயும் சேர்க்கிறது.
ColorOS 6 முகப்புத் திரையின் (Home Screen) தோற்றத்தையும் உணர்வையும் ஜாஸ் செய்கிறது. மேலும் புதிய wallpapers (நிலையான மற்றும் நேரடி இரண்டும்), drawer mode மற்றும் batch icon management tool ஆகியவற்றைச் சேர்க்கிறது. கேமரா UI மாற்றியமைக்கப்பட்டுள்ளது மற்றும் portrait mode-ம் சில மேம்படுத்தல்களைப் பெற்றுள்ளது. Favourites செயல்பாடும் வந்துவிட்டது, பயனர்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் கேலரியில் ஒரு தனி folder-ல் சேமிக்க அனுமதிக்கிறது. மேலும், இந்த அப்டேட் பயனர்களை எச்சரிக்க flash on call அம்சத்தை சேர்க்கிறது. மேலும் புளூடூத் வழியாக ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களுடன் இணைப்பதற்கான ஆதரவை இயக்குகிறது. கடைசியாக, Oppo K1 மற்றும் Oppo R15 Pro-வுக்கான ColorOS 6 அப்டேட், display effects-ஐ கட்டுப்படுத்த Riding Mode மற்றும் Colour Screen Mode-ஐ சேர்க்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்