சீன மொபைல் உற்பத்தியாளரான ஓப்போ, அதன் வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் Oppo Find X2-வின் அறிமுக தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. இது மார்ச் 6-ஆம் தேதி சீனாவில் நடைபெறும் ஒரு நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்று ஓப்போ ஒரு ஆன்லைன் பதிவில் உறுதிப்படுத்தியது. முன்னதாக, இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 22 அன்று MWC பார்சிலோனா நிகழ்வில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் குறித்த அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. இந்த வெளியீடு மாலை 5 மணிக்கு, பெய்ஜிங் நேரம் (2.30 PM IST) நடைபெறும் என்று வெய்போவின் ஆன்லைன் பதிவு மேலும் கூறியுள்ளது.
இந்த நேரத்தில், Oppo Find X2-வின் விவரக்குறிப்புகள் தெளிவாக இல்லை. Oppo Find X2, ஸ்னாப்டிராகன் 865 பிராசசர் மூலம் இயக்கப்படும் என்பதை OPPO-வின் துணைத் தலைவரும் உலகளாவிய விற்பனைத் தலைவருமான ஆலன் வு (Alen Wu) முன்பு உறுதிப்படுத்தியிருந்தார். கடந்த வாரம், ஸ்மார்ட்போன் வியட்நாமிய சில்லறை விற்பனையாளர் வலைத்தளமான ஷோபியிலும் (Shopee) காட்டப்பட்டது. இது அதன் கூறப்பட்ட விவரக்குறிப்புகளை பட்டியலிட்டது. இணையதளத்தில் உள்ளபடி, போனில் 6.5 அங்குல AMOLED திரை, 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ், பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பு மற்றும் 32 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
Find X2-வில் 4,065 எம்ஏஎச் பேட்டரி, USB டைப்-சி போர்ட் மற்றும் ஆடியோ ஜாக் இல்லை. Oppo Find X2, ஆண்ட்ராய்டு 10 உடன் வெளியேறும் என்றும் அந்த பட்டியல் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை VND 40,000,000 [இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,23,700]-யாக ஷாப்பி (Shopee) பட்டியலிட்ள்ளது. தற்போது, Oppo Find X2-வின் முன்னோடி Find X இந்தியாவில் ஜூன் 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் விலை ரூ.59,990 ஆகும். Find X அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், ஸ்மார்ட்போன் ஒரு மோட்டார் கேமரா பாப்-அப் வடிவமைப்பைக் கொண்ட முதல் போன்களில் ஒன்றாகும் என்பதால் இந்தத் துறையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
முன்னதாக, Find X2 உடன் நிறுவனம் தனது ஸ்மார்ட்வாட்சை வெளியிடக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவித்தன. ஒப்போ விபி பிரையன் ஷென் (Brian Shen) ட்விட்டரில் பகிர்ந்த டீஸர் படம் ஆப்பிள் வாட்ச் போன்ற வடிவமைப்பைக் காட்டியது.
Here's another look at the forthcoming OPPO Watch. ???? The curved screen and 3D glass will be a game changer. ???? pic.twitter.com/ozbl9BXNZq
— Brian Shen (@BrianShenYiRen) February 17, 2020
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்