அடுத்த ஆண்டு புதிய F-சீரிஸ் போனை இந்தியாவுக்குக் கொண்டுவர ஓப்போ தயாராக உள்ளது. Oppo F15 போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதாக நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. Oppo F15 ஒரு நேர்த்தியான மற்றும் இலகுரக வடிவமைப்பைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், போனின் விவரக்குறிப்புகள் அல்லது அம்சங்கள் குறித்து எந்த விவரங்களையும் நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை. இருப்பினும், டீஸர் படம் போனின் வடிவமைப்பை ஒரு பக்கத்திலிருந்து காட்டுகிறது.
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் இந்தியாவில் Oppo F15 போனின் ஒரு குறிப்பிட்ட வெளியீட்டு காலக்கெடுவை வெளியிடவில்லை. ஆனால், “2020-ல் ஒரு புதிய நேர்த்தியான F சீரிஸ் ஸ்மார்ட்போனுடன்” அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த போன் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்பதை தெளிவுபடுத்துகிறது.
Oppo F15 ஒரு நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று ஓப்போ கூறுகிறது. மேலும் Oppo F-சீரிஸ் போன்களின் செல்ஃபிக்களில் கவனம் செலுத்துவதால், Oppo F15-ல் சக்திவாய்ந்த முன் கேமரா வன்பொருளையும் எதிர்பார்க்கலாம். ஓப்போ பகிர்ந்த டீஸர் படம் போனை ஒரு பக்கத்திலிருந்து காட்டுகிறது. பளபளப்பான ஃபினிஷுடன் போனைச் சுற்றி இயங்கும் curved metallic frame தோன்றுவதை வெளிப்படுத்துகிறது. colour tone உடன் கூடிய பவர்-பொத்தானும் தெரியும்.
குறிப்பிடத்தக்க வகையில், போனில் ஒரு நீளமான கேமரா தொகுதி இருப்பதாகத் தெரிகிறது. இது செங்குத்தாக சீரமைக்கப்பட்ட லென்ஸ் வரிசையைக் கொண்டிருக்கும். Oppo F11 மற்றும் F11 Pro ஆகியவை இரட்டை பின்புற கேமராக்களுடன் பொருத்தப்பட்டிருக்கின்றன. எனவே Oppo F15 குறைந்தது இரண்டு பின்புற கேமராக்களைக் கொண்டிருக்கும் என்று கருதுவது பாதுகாப்பானது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்