வரும் மார்ச் 5 ஆம் தேதி ஓப்போவின் எஃப் 11 ப்ரோ வெளியாகவுள்ள நிலையில், போனின் முக்கிய தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. நமக்கு கிடைத்த தகவல்படி, இந்த போன் மீடியா டெக் சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேமுடன் வெளியாகவுள்ளதாக தெரிகிறது. அத்துடன் ஆண்ட்ராய்டு பைய் வெர்ஷன் மென்பொருள் மற்றும் கலர் ஓஎஸ் போன்ற தொழில்நுட்பங்களுடன் இந்த போன் வெளியாக வாய்ப்புள்ளது.
மேலும், எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.5 இஞ்ச் ஹெச்டி திரை கொண்டுள்ளதாகவும் 64 மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதிகளுடன் சந்தைக்கு வரும் எனக் கூறப்படுகிறது. இரண்டு பின்புற கேமராக்கள் இந்த போனில் இருக்க வாய்புள்ளதாகவும் அவைகள் 48 மெகாபிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் இருக்கலாம் எனத் தெரிகிறது. பேட்டரி வசதியைப் பொறுத்தவரை 4,000mAh பவர் கொண்டு இருக்கலாம் என எதிர்பார்கப்படுகிறது.
90 கிராம் எடையுடன் தண்டர் ப்ளாக் மற்றும் ஆரோரா க்ரீன் நிறங்களில் போன் விற்பனைக்கு வரும். நிறுவனம் சார்பில் 48 மெகா பிக்சல் சென்சார், சூப்பர் நையிட் மோட், பாப்ஆப் செல்ஃபி கேமரா மற்றும் பின்புறம் அமைந்திருக்கும் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் ஆகியவை போனில் இருக்கும் என்பது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன.
அதிகார்வபூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில், மார்ச் 5 ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்