ஓப்போ நிறுவனத்தின் தயாரிப்பான ஓப்போ எஃப்11 ப்ரோ வரும் மார்ச் 5 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் நிலையில், அந்நிறுவனம் சார்பில், போனை தற்போது நாம் பயன்படுத்தினால் எப்படி இருக்கும் என்ற வீடியோ காட்சி ஓன்றை வெளியிட்டுள்ளது.
oppo F11 Pro pic.twitter.com/W6k1Er9uDF
— Boby Đỗ (杜成忠) (@Boby25846908) February 20, 2019
இந்த குறுங்காட்சியில் போனின் பின்புறம் மற்றும் முன்புறம் இருக்கும் அமைப்புகளை நம்மால் காண முடிகிறது. மேலும் அந்த வீடியோவில் அட்டகாசமான தரத்தில் கிரேடியன்ட் ஃபினிஷ் கொடுக்கபட்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இரண்டு பின்புற கேமராக்கள் மற்றும் பாப் ஆப் செல்ஃபி கேமரா போன்ற அமைப்புகளை இந்த போன் கொண்டிருப்பது போல் காட்சிகள் இருக்கின்ற நிலையில், அதன் செயல்பாட்டை நம்மால் பார்க்க முடிகிறது.
இந்த வீடியோவின் மூலம், போனில் நிச்சயமாக பாப் ஆப் செல்ஃபி கேமரா மற்றும் 48 மெகா பிக்சல் பின்புற கேமரா, 3டி கிரேடியன்ட் மற்றும் சூப்பர் நைட் மோட் கண்டிப்பாக இருக்கும் என்று தெரிகிறது. மேலும் இந்த போனில் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளதாகவும் நீலம் மட்டும் ஊதா நிறங்களில் வெளியாகும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்