Photo Credit: TENAA
ஓப்போ நிறுவனத்தின் வரவிருக்கும் ஸ்மார்ட்போனாக Oppo A92s இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன், கீக்பெஞ்ச் பட்டியல் மற்றும் TENAA சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Oppo A92s-ன் மாடல் எண் PDKM00 என்று நம்பப்படுகிறது. இந்த போன் Android 10-ல் இயக்கும் என்றும், ஆக்டா கோர் MT6873 SoC-யால் இயக்கப்படும் என்றும், டைமன்சிட்டி 800 5 ஜி சிப்செட்டாக இருக்கக்கூடும் என்றும் கீக்பெஞ்ச் பட்டியல் காட்டுகிறது.
இந்த போனின் 6.57 அங்குல (1,080x2,400 பிக்சல்கள்) டிஸ்பிளேவை TENAA சான்றிதழ் வலைத்தளத்தில் காணலாம். CPU அதிர்வெண் 2.0GHz என பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த போன் 6 ஜிபி, 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ஆகிய ரேம் வேரியண்டுகளையும், 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களையும் கொண்டிருக்கும்.
Oppo A92s-ல் மொத்தம் ஆறு கேமராக்கள் உள்ளன. பின்புற கேமராக்களில் 48 மெகாபிக்சல் ஷூட்டர், 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் கேமராக்கள் உள்ளன. முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் ஷூட்டர்கள் ஹோல்-பஞ்ச் வடிவமைப்பில் வைக்கப்பட்டுள்ளன என்பதை TENAA பட்டியல் காட்டுகிறது.
இந்த போன் 3,890mAh பேட்டரி மற்றும் Wi-Fi, LTE, VoLTE, Bluetooth, GPS அம்சங்களுடன் வருகிறது. இந்த போன் 163.8x75.5x8.1 மிமீ அளவு மற்றும் 184 கிராம் எடையைக் கொண்டிருக்கும் என பட்டியலிடப்பட்டுள்ளது. ஒரு போஸ்டர் Oppo A92s 120Hz டிஸ்பிளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்