ஓப்போ ஏ 92-ன் விலை மற்றும் விவரங்கள் கசிந்தன!

ஓப்போ ஏ 92-ன் விலை மற்றும் விவரங்கள் கசிந்தன!

ஓப்போ A92, ஒரு ஹோல்-பஞ்ச் காட்சி வடிவமைப்பில் வரும் என்று ரெண்டர்கள் குறிப்பிடுகின்றன

ஹைலைட்ஸ்
  • ஓப்போ ஏ 92, 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் பட்டியலிடப்பட்டுள்ளது
  • போனில் 18W சார்ஜருடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது
  • ஓப்போ ஏ 92, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இருக்கும்
விளம்பரம்

ஓப்போ ஏ 92 வெளியீட்டுக்கு முன்பே இந்தோனேசிய ஷாப்பிங் தளமான லாசாடா பட்டியலிடப்பட்டுள்ளது. இதுவரை, ஸ்மார்ட்போன் பற்றி பல கசிவுகள் காணப்பட்டன. இதில் ஆப்போ ஏ 92-ன் விவரக்குறிப்பு மற்றும் வடிவமைப்பு அறியப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் விலை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஓப்போ ஏ 92-ன் விலையும் சமீபத்திய பட்டியலில் சிறப்பிக்கப்பட்டுள்ளது. 


போனின் விலை: (எதிர்பார்க்கப்படுபவை)

Oppo A92, லாசாடா பட்டியலில் இடம் பெற்றுள்ளது. போன்களின் இரண்டு பட்டியல்கள் இங்கே உள்ளன - முதல் பட்டியல் ஐடிஆர் 3,999,000 (சுமார் ரூ.20,100)-யாகவும், இரண்டாவது பட்டியலில் ஐடிஆர் 4,499,000 (சுமார் ரூ.22,600)-யாகவும் உள்ளன. இந்த போன் பிளாக், பர்பில் மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. 

Oppo A92 Image Leak Shows Aurora Purple Variant, Side-Mounted Fingerprint Sensor

இந்த போனை அறிமுகப்படுத்துவது குறித்து ஓப்போ எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் தற்போது வழங்கவில்லை.


போனின் விவரங்கள்: (எதிர்பார்க்கப்படுபவை)

ஓப்போ ஏ 92 6.55 முழு எச்டி + (1080x2400 பிக்சல்கள்) ஹோல்-பஞ்ச் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வரும். பட்டியலின்படி, போன் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்டுடன் வரும். மேலும், ஆண்ட்ராய்டு 10 உடன் கலர்ஓஎஸ் 7.1-ல் இயங்கும். ஸ்னாப்டிராகன் 665 ஆக்டா கோர் சிப்செட் மற்றும் 8 ஜிபி ரேம் மூலம் இந்த போன் அறிமுகப்படுத்தப்படும். ஸ்மார்ட்போனில் 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் இருக்கும்.

Oppo A92 Tipped to Come With Quad Rear Cameras and 5,000mAh Battery, Render Leaked

போனில் ஒரு செவ்வக வடிவ கேமரா தொகுதியைக் கொண்டிருக்கும் என்று அறியப்படுகிறது. அதன் உள்ளே ஒரு குவாட் கேமரா அமைப்பு இருக்கும். இதில், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை இடம்பெறும். போனின் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும்.

Smartphone Camera Zoom Explained: What Is It, Beyond the Marketing Hype

இந்த போனில், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உதவியுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி இருக்கும். போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் பொருத்தப்பட்டிருக்கும். இந்த போன் 162x75.5x8.9 மில்லிமீட்டர் மற்றும் 192 கிராம் எடையுள்ளதாக இருக்கும். 


In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

  • KEY SPECS
  • NEWS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo A92, Oppo A92 Price, Oppo A92 specifications, Oppo A92s Renders, Oppo
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »