ஓப்போ A9 ஸ்மார்ட் போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த போனுக்கான ப்ரீ-ஆர்டரும் தற்போது ஆரம்பித்துள்ளது. வாட்டர்-ட்ராப் நாட்ச், டூயல் ரியர் கேமரா, ஆண்ட்ராய்டு பைய், 6ஜிபி ரேம், 16 மெகா பிக்சல் கேமரா, 4020 எம்.ஏ.எச் பேட்டரி போன்ற வசதிகளை A9 பெற்றுள்ளது. ஏப்ரல் 30 முதல் இந்த போன் விற்பனைக்கு வரவுள்ளது.
ஓப்போ A9 விலை:
ஓப்போ, A9-ன், 6ஜிபி + 128ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போனை சுமார் 18,700 ரூபாய்க்கு விற்கப்படும். தற்போது ப்ரீ-ஆர்டரில் இந்த போன் உள்ளது.
ஓப்போ A9 வடிவமைப்பு, சிறப்பம்சங்கள்:
முன்னரே சொன்னது போல ஓப்போ A9-ல் வாட்டர்-ட்ராப் நாட்ச் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. போனின் பின்புறத்தில் டூயல் ரியர் கேமரா, ஃபிங்கர் பிரின்ட் சென்சார், க்ரேடியன்ட் ஃபினிஷ் உள்ளிட்டவை இருக்கின்றன. போனிற்கு அடியில் 3.5 எம்.எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஸ்பீக்கர் க்ரில் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இடது புறத்தில் வாய்யூம் கன்ட்ரோல் இருக்கிறது. பவர் பட்டன் வலது விளிம்பில் உள்ளது.
ஆண்ட்ராய்டு பைய் மென்பொருள் மூலம் இந்த போன் இயங்குகிறது. 6.5 இன்ச் முழு எச்.டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ள A9, கொரில்லா க்ளாஸ் பாதுகாப்புடன் வருகிறது. போனின் ப்ராசஸர் குறித்துத் தகவல் இல்லை. ஆனால் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு வசதி மூலம் A9 இயங்குகிறது.
போனின் பின்புறத்தில் 16 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்புறம் செல்ஃபிகளுக்காக 16 மெகா பிக்சல் கேமரா இருக்கிறது.
4020 எம்.ஏ.எச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், 4ஜி வோல்ட், Wi-Fi 802.11 ac, ப்ளூடூத் v4.2, ஜிபிஎஸ் உள்ளிட்ட பிற வசதிகளும் போனில் இருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்