Oppo A9 2020 Vanilla Mint கலர் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஆப்ஷன் Marine Green மற்றும் Space Purple வண்ணக்களுடன் ஒத்துப்போகிறது. இது செப்டம்பர் மாதம் Oppo A9 2020-யின் முறையான அறிமுகத்தின் போது வெளியானது.
Oppo A9 2020 Vanilla Mint கலர் ஆப்ஷனின் 4GB RAM ஆப்ஷன் ரூ. 15,990 விலைக் குறியைக் கொண்டுள்ளது. அதன் 8GB RAM வேரியண்ட் ரூ. 18,490-யாக விலையிடப்படுள்ளது. இரண்டு ஆப்ஷன்களும் பல்வேறு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகள் மூலம் கிடைக்கும். மேலும், HDFC மற்றும் ICICI வங்கிகள் மூலம் மேற்கொள்ளப்படும் கொள்முதலுக்கு ஐந்து சதவீத கேஷ்பேக்கும் அடங்கும்.
நினைவுகூர, Oppo A9 2020 இந்தியாவில் ரூ. 16.990 ஆரம்ப விலையுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த போன் சமீபத்தில் நாட்டில் ரூ. 1,000 (received a Rs. 1,000 price cut) விலைக் குறைப்பைப் பெற்றது.
டூயல்-சிம் (நானோ) ஸ்மார்ட்போன் ColorOS 6.1 உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது -- இது, Color 7 உடன் Android 10-க்கு மேம்படுத்தப்படுகிறது (upgradable to Android 10 with Color 7). இந்த போன் 8GB RAM உடன் இணைக்கப்பட்டு, octa-core Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது.
Oppo A9 2020, 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் 2 மெகாபிக்சல் monochrome சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் depth சென்சாரும் உள்ளது. செல்ஃபிக்களுக்கு, ஓப்போ ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் உள்ளது.
ஸ்டோரேஜைப் பொறுத்தவரை, Oppo A9 2020, 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இது microSD card வழியாக (256GB வரை) விரிவாக்கக்கூடியது. இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS மற்றும் USB Type-C ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் rear-mounted fingerprint சென்சாருடன் வருகிறது. தவிர, இது 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்