ஒன்பிளஸ் அதன் வரவிருக்கும் OnePlus 8-சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங்கைச் சேர்க்கலாம். OnePlus 8 Pro சமீபத்தில் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவைச் சேர்ப்பதாக வதந்தி பரவியது மற்றும் சமீபத்திய வளர்ச்சி அந்த நம்பிக்கையை மேம்படுத்துகிறது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் வயர்லெஸ் பவர் கன்சோர்டியம் (WPC)-ல் இணைந்துள்ளார். இது வயர்லெஸ் சார்ஜிங் தரங்களின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு பொறுப்பான ஒரு குழுவாகும். ஒன்பிளஸ் அதன் ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங்கைச் சேர்க்கத் திட்டமிட்டால் கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. OnePlus 8-சீரிஸ் கிடைக்குமா, அல்லது OnePlus 8T வரிசை வரும் வரை நாம் காத்திருக்க வேண்டுமா என்பதுதான் கேள்விக்குறியாகவே உள்ளது.
குழுவின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்ட WPC உறுப்பினர்கள், ஒன்பிளஸ் இப்போது தரநிலைக் குழுவின் முழு உறுப்பினராக இருப்பதை வெளிப்படுத்தியது. இது, Apple, Samsung, LG, Oppo, HMD Global, Huawei, Asus மற்றும் பிற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுடன் இணைகிறது. இந்த பட்டியலை முதலில் MobileScout.com கண்டறிந்தது.
OnePlus, பாரம்பரியமாக அதன் ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவைச் சேர்ப்பதில் இருந்து விலகி உள்ளது. அதன் போன்களை ஆக்ரோஷமாக விலை நிர்ணயம் செய்வதற்கு நிறுவனம் செலவினங்களைக் குறைக்க உதவும் ஒரு வழி இது என்று நம்பப்படுகிறது. ஆனால், வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்டவற்றைத் தவிர்ப்பதற்காக, நிறுவனம் அதன் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தின் வலிமையைக் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு MWC-ல் லாவ் (Lau) கூறியதாகக் கூறப்படுகிறது: “ஒன்பிளஸ் சார்ஞிங் மிகச் சிறந்த ஒன்றாகும். வயர்லெஸ் சார்ஜிங் மிகவும் குறைவானது".
OnePlus 8-சீரிஸ் போன்கள், வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவைப் பெறுகின்றனவா என்பதை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால், WPC-ல் சேர நிறுவனத்தின் முடிவு நிச்சயமாக அதன் ரசிகர்கள் மற்றும் நுகர்வோரால் வரவேற்கப்படும்.
OnePlus 8-சீரிஸைப் பற்றி வதந்திகள் மற்றும் கசிவுகள் சுட்டிக்காட்டியுள்ளதிலிருந்து, OnePlus 8 Pro நிறுவனம் ஏற்கனவே காட்டிய 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்பிளே வர வாய்ப்புள்ளது. கூடுதலாக, 5G ஆதரவு மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC-யின் இருப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்