ஒன்பிளஸ் டிவி செப்டம்பர் மாதத்தில் அறிமுகமாகவுள்ளது, மேலும் இந்த தயாரிப்பு முதன் முதலாக இந்திய சந்தையிலேயே அறிமுகமாகவுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய தயாரிப்பு பற்றி வரிசையாக அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் ஒரு ட்வீட்டில், ஒன்பிளஸ் டிவி 55-இன்ச் QLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதிப்படுத்துகிறது. 55-இன்ச் திரை அளவு உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், சமீபத்தில் வெளியான தகவல்கள் இந்த டிவி 43-இன்ச் முதல் 75-இன்ச் வரை பலவிதமான திரை அளவுகளில் இந்த டிவி அறிமுகமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஒரு ட்விட்டில் வரவிருக்கும் ஒன்பிளஸ் டிவி 55-இன்ச் QLED டிஸ்ப்ளே திரையை கொண்டிருக்கும் என்று அறிவித்துள்ளது. 4K தெளிவுத்திறன் குவாண்டம் டாட் அல்லது QLED டிஸ்ப்ளே பேனல்கள் பரவலாகப் பயன்படுத்தப்படும் OLED பேனல்களைக் காட்டிலும் மலிவானது. இந்த ட்வீட்டில் அமேசான் இந்தியாவில் ஒன்பிளஸ் டிவியின் பிரத்யேக பக்கத்திற்கான இணைப்பும் இடம்பெற்றுள்ளது. இது இந்த இ-காமர்ஸ் தளத்தில் ஒன்பிளஸ் டிவி விற்பனைக்கு வரவுள்ளது என்பதை மீண்டும் குறிப்பிடுகிறது. அமேசான் தளம், இந்த டிவியை பெற ஆர்வமுள்ளவர்களின் விவரங்களை பெற்ற வண்ணம் உள்ளது.
தலைமை நிர்வாக அதிகாரி பீட் லாவ் (Pete Lau) ஒன்பிளஸ் டிவி பிரீமியம் பிரிவில் நிலைநிறுத்தப்படும், சாம்சங் மற்றும் சோனி போன்றவற்றுடன் போட்டியிடும், என்று சமீபத்தில் கேஜெட்ஸ் 360-க்கு கூறியிருந்தார். இந்திய சந்தையில் அதிக பிரபலமாக இல்லாத அண்ட்ராய்ட் டிவிக்கான உகந்த தீர்வை தொலைக்காட்சி வழங்கும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். "நான் முன்னிலைப்படுத்த விரும்பும் ஒரு முக்கிய தகவல் என்னவென்றால், நாங்கள் உண்மையில் அண்ட்ராய்ட் டிவி அமைப்பை மேம்படுத்துகிறோம், இதை இந்திய சந்தையில் நிறைய பிராண்ட்களில் நான் காணவில்லை. கூகுள் உடனான எங்கள் சிறப்பு ஒப்பந்தம் மூலம், நாங்கள் அவர்களின் ஆண்ட்ராய்ட் டிவி அமைப்பைப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதை மிக ஆழமாக மேம்படுத்துகிறோம்." என்று கூறியிருந்தார்.
முன்பு குறிப்பிட்டுள்ளதுபோல, ஒன்பிளஸ் டிவி அடுத்த மாதம் உலகளவில் அறிமுகமாகும், மேலும்இந்தியாவில் முதன்முதலில் அறிமுகமாகும் என்பதை ஏற்கனவே அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரும் அதிக விலையுயர்ந்த OLED தொழில்நுட்பத்திற்கு பதிலாக QLED பேனல்களைப் பயன்படுத்துவதையும் உறுதிப்படுத்தியுள்ளனர். கூகுளின் ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தின் திருத்தப்பட்ட பதிப்பை ஒன்பிளஸ் டிவி இயக்கவுள்ளது.
ஒன்பிளஸ் டிவியின் அறிமுகம் முன்னர் செப்டம்பர் 26 என்று தகவல் வெளியாகியிருந்தது, ஆனால் இதுவரை நிறுவனத்திடமிருந்து எந்த உறுதியான தகவலும் இல்லை. இந்த மாத தொடக்கத்தில்,Bluetooth SIG -யின் ஒரு அறிக்கை, ஒன்பிளஸ் டிவி 43-இன்ச் முதல் 75-இன்ச் வரையிலான அளவுகளில் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்