Photo Credit: OnLeaks/ CashKaro
அடுத்த தலைமுறை ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனான OnePlus 8, கீக்பெஞ்சில் GALILEI IN2025 என்ற குறியீட்டு பெயருடன் வெளிவந்துள்ளது. புதிய ஒன்பிளஸ் போனின் சில விவரக்குறிப்புகள் பெஞ்ச்மார்க் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த போன் ஆண்ட்ராய்டு 10-க்கு வெளியே இயங்குவதாகத் தோன்றுகிறது மற்றும் பட்டியல் பிப்ரவரி 12-ஐ பதிவேற்றும் தேதியாகக் காட்டுகிறது. இருப்பினும், OnePlus 8-ன் அதிகாரப்பூர்வ அறிமுகத்தைப் பற்றி எந்த விவரங்களையும் இதுவரை அறிவிக்கவில்லை. ஆயினும்கூட, அமேசான் இந்தியா இணையதளத்தில் ஒரு துணைப் பக்கம் சமீபத்தில் OnePlus 8 மற்றும் OnePlus 8 Pro இரண்டையும் உருவாக்க பரிந்துரைத்தது.
OnePlus 8 என்று நம்பப்படும் GALILEI IN2025 என்ற குறியீட்டு பெயருடன் ஒரு ஸ்மார்ட்போனை, கீக்பெஞ்ச் பட்டியல் சிறப்பித்துக் காட்டுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் Android 10 போன்ற விவரக்குறிப்புகளையும் காட்டுகிறது. மேலும், போனில் SoC-யாக “கோனா” இருப்பதாகத் தெரிகிறது. அது Qualcomm Snapdragon 865-யாக இருக்கலாம்.
கூடுதலாக, கீக்பெஞ்ச் பட்டியல் ஒற்றை கோர் மதிப்பெண் 4,276 மற்றும் மல்டி கோர் ஸ்கோர் 12,541 ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சாதனம் ஒரு முன்மாதிரியாக இருக்கக்கூடும் என்பதால் இவை ஸ்மார்ட்போனின் உண்மையான செயல்திறனை பிரதிபலிக்காது.
கடந்த மாதம், OnePlus 8 Pro எனக் கூறப்பட்ட கீக்பெஞ்ச் தளத்தில் GALILEI IN2023 என்ற குறியீட்டு பெயருடன் ஒரு ஸ்மார்ட்போன் தோன்றியது. இது புதிய மாடலில் 12 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 10-ஐ பரிந்துரைத்தது. மேலும், அந்த கீக்பெஞ்ச் பட்டியலில் ஸ்னாப்டிராகன் 865 SoC-யாக இருக்கக்கூடிய கோனா என்ற சிப்செட் குறியீட்டு பெயரும் அடங்கும்.
OnePlus 8 Pro மற்றும் OnePlus 8 மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாகும் என்று வதந்திகள் பரவுகின்றன. அமேசான் இந்தியா வலைத்தளமும் சமீபத்தில் இணைந்த பக்கத்தின் மூலம் அவற்றின் இருப்பை பரிந்துரைத்தது. மேலும், புதிய OnePlus ஸ்மார்ட்போன்கள் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் மற்றும் 120Hz QHD+ Fluid டிஸ்பிளே அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்