ஒன்பிளஸ் 8 புரோ மற்றும் ஒன்பிளஸ் 8 போன்கள் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இரண்டு போன்களின் முழு விவரக்குறிப்புகள், ஆன்லைனில் கசிந்துள்ளன. இரண்டு போன்களும் ஸ்னாப்டிராகன் 865 SoC-யா இயக்கப்படும் மற்றும் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவைக் கொண்டுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிப்ஸ்டர் இஷான் அகர்வால், OnePlus 8 Pro மற்றும் OnePlus 8 போன்களின் முழு விவரக்குறிப்பு தாளை ட்வீட் செய்துள்ளார். ஒன்பிளஸ் 8 ப்ரோவில், 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.78 இன்ச் கியூஎச்டி + சூப்பர் அமோலேட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் ஆப்ஷனுடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படும். இண்டர்னல் ஸ்டோரேக் ஆப்ஷன்களில் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் அடங்கும்.
கேமராக்களைப் பொறுத்தவரை, ஒன்பிளஸ் 8 ப்ரோ குவாட் பின்புற அமைப்பில் இரண்டு 48 மெகாபிக்சல் கேமராக்கள், ஒரு 8 மெகாபிக்சல் கேமரா மற்றும் நான்காவது 5 மெகாபிக்சல் சென்சார் ஆகியவை அடங்கும். முன்னால், 16 மெகாபிக்சல் செல்பி கேமராவும் இருக்கும். 30W வார்ப் சார்ஜ் 30டி மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 4,510 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்ய இந்த போன் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், இது 3W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஐபி 68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பையும் ஆதரிக்கும்.
ஒன்பிளஸ் 8, 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.55 அங்குல முழு எச்டி + சூப்பர் அமோலேட் டிஸ்பிளே இடம்பெற பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த போன் 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் ஆப்ஷன்களுடன் இணைக்கப்பட்டு, ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படுகிறது. ஒன்பிளஸ் 8-ல் 48 மெகாபிக்சல் பிரதான சென்சார், 16 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. ஒன்பிளஸ் 8 ப்ரோவைப் போலவே 16 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் இந்த போன் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த போன் 30W வார்ப் சார்ஜ் 30டி ஆதரவுடன் சிறிய 4,300 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த வேரியண்ட் எந்த ஐபி மதிப்பீட்டையும் வழங்கவில்லை என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லா (Pete Lau) இரு போன்களும் 5ஜியை ஆதரிக்கும் என்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்