OnePlus 7T Pro இன்று லண்டனில் நடைபெறும் OnePlus 7T சீரிஸ் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமேசான் இந்தியாவில் OnePlus 7T தொடருக்கான பிரத்யேக பக்கத்தையும் கொண்டுள்ளது. மெக்லாரன் பதிப்பு (McLaren Edition) ஸ்மார்ட்போனும் இன்று வெளியிடப்படும். மேலும், OnePlus 7T Pro-வின் மாறுபாடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. OnePlus 7T Pro வெளியீட்டு நிகழ்வு மாலை 4 மணிக்கு BST (8.30pm IST) தொடங்கும். இது யூடியூப் மற்றும் OnePlus வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
OnePlus 7T Pro வெளியீட்டு நிகழ்வின் லைவ் ஸ்ட்ரீம் விவரங்கள்:
நாங்கள் குறிப்பிட்டுள்ளபடி, லண்டனில் OnePlus 7T Pro வெளியீட்டு நிகழ்வு மாலை 4 மணிக்கு BST (8.30pm IST)-ல் தொடங்கும். இந்த நிகழ்வு நிறுவனத்தின் வலைத்தளம் மற்றும் யூடியூபிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். OnePlus 7T Pro மெக்லாரன் பதிப்பும் இந்த நிகழ்வில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பார்ட்னர்ஷிப் சமூக வலைதளங்களில் பெரிதும் கிண்டல் செய்யப்படுகிறது. OnePlus 7T Pro-யின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் தொலைபேசியின் விலை OnePlus 7 Pro வரம்பை விட சற்றே அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவுகூர, இந்தியாவில் OnePlus 7T Pro-வின் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை 48,999-ரூபாயாகவும், 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜின் விலை 52,999-ரூபாயாக தொடங்கவுள்ளது. top-end 12 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜின் விலை 57.999-ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
OnePlus 7T Pro மெக்லாரன் பதிப்பு (McLaren Edition) 12 ஜிபி + 256 ஜிபி உள்ளமைவில் வரும் என்றும், EUR 849 முதல் EUR 859 வரை (தோராயமாக ரூ .66,000 முதல் ரூ. 67,000 வரை) இருக்கும் என்றும் Tipster Ishan Agarwal கூறுகிறார். இதுவரை மிகவும் விலையுயர்ந்த ஒன்பிளஸ் சாதனமாக மாறும். இந்திய நேரப்படி இரவு 8.30 மணி முதல், OnePlus 7T Pro நிகழ்வை, கீழேயுள்ள வீடியோவில் நேரடியாகக் காணலாம்:
OnePlus 7T Pro-வில் எதிர்பார்க்கப்டும் விவரக்குறிப்புகள்:
OnePlus 7T போலல்லாமல், OnePlus 7T Pro 6.65 Quad-HD+ (1440x3100 pixels) Fluid AMOLED display-வுடன் HDR10+ ஆதரவுடன் பேக் செய்யப்போகிறது. இந்த தொலைபேசி Qualcomm Snapdragon 855+ SoC-ல் இயக்கப்படும். இது 8 ஜிபி அல்லது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள் சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக, OnePlus 7T Pro வெளியீட்டில் மேலும் தெரிந்துக்கொள்வோம்.
தொலைபேசி Android 10-ல் இயங்கும். OnePlus 7T-யில் காணப்படும் waterdrop-style notch-க்கு பதிலாக, pop-up camera module-ன் பகுதியாக front shooter இருக்கும். மேலும், Warp Charge 30T-யுடன் 4,085mAh பேட்டரி இருப்பதாக கூறப்படுகிறது. இது OnePlus 7T Pro வெளியீட்டில் மீண்டும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்