Photo Credit: Slashleaks
ஆறு மாத மேம்படுத்தல் சுழற்சியைப் பின்பற்றும் சில உற்பத்தியாளர்களில் ஒன்பிளஸ் நிறுவனமும் ஒன்றாகும். இந்த முதன்மை நிறுவனத்தின் T-தொடரில் உருவான ஒன்பிளஸ் 5T மற்றும் ஒன்ப்ளஸ் 6T ஆகிய ஸ்மார்ட்போன்களை நாம் கண்டுள்ளோம். தற்போது அந்த நிறுவனம் ஒன்பிளஸ் 7 Pro-வின் மேம்படுத்தப்ப்ட்ட வெர்ஷன் ஸ்மார்ட்போனின் தயாரிப்பை ஏற்கனவே தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது, மேலும் அந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 7T Pro-வாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் நேரடி புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன, இது ஒன்பிளஸ் 7T Pro தயாரிப்பு செயல்பாட்டில் உள்ளது என்பதை உணர்த்துகிறது.
ஒன்பிளஸ் 7T Pro-வின் நேரடி படங்கள் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை மறைக்கக்கூடிய வகையிலான ஒரு கவரில் பொருத்தப்பட்டுள்ளதை காண்பிக்கிறது. வெளியான படத்தில் இருந்து, இந்த ஸ்மார்ட்போன் எந்த ஒரு நாட்ச் மற்றும் ஹோல்-பன்ச் கேமராக்கள் இல்லாமல் முன்புறம் முழுவதும் திரையாகவே அமைந்துள்ளது என்பது தெரிகிறது. மேலும் அந்த ஸ்மார்ட்போன் பொருத்தப்பட்ட கவரின் மேல் பகுதியில் இரண்டு துளைகள் உள்ளன. அவற்றில் ஒன்று இந்த ஸ்மார்ட்போம் பாப்-அப் செல்பி கேமராவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்க வைக்கிறது. மற்றொரு ஸ்மார்ட்போன், மைக்ரோபோனிற்காக இருக்கலாம்.
தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தினால் இந்த ஸ்மார்ட்போன் வளைந்த திரையை கொண்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் , இந்த ஸ்மார்ட்போன் சமீபத்திய ஆண்ட்ராய்ட் Q அமைப்பு கொண்டு செயல்படுகிறது என்பதும் உறுதியாகியுள்ளது.
இன்னும் இந்த ஸ்மார்ட்போன் பற்றி எந்த தகவலும் வெளியாகாத நிலையில் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 855 ப்ளஸ் ப்ராசஸர் கொண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வெளியான ஒன்பிளஸ் 3T, ஒன்பிளஸ் 5T மற்றும் ஒன்ப்ளஸ் 6T ஆகிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதியை வைத்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் மாதத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்