Photo Credit: Twitter/ Sudhanshu Ambhore
மே மாதம் 14ஆம் தேதி உலக அளவில் விற்பனைக்கு வெளியாக உள்ள ஸ்மார்ட்போன் ஒன்ப்ளஸ் 7 Pro (OnePlus 7 Pro). அப்படி வெளியாக உள்ள இந்த ஸ்மார்ட்போனின் சில சிறப்பம்சங்களை அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பேட் லவ் (Pete Lau) வெளியிட்டுள்ளார். அதன்படி மே14 அன்று வெளியாக உள்ள இந்த ஸ்மார்ட்போன் HDR 10+ திரை கொண்டு வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி அதிவேக 3.0 சேமிப்பு கொண்டு வெளியாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். இதன் மூலம், மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில் இதன் வேகம் அதிகமாக இருக்கும். அதிவேக 3.0 சேமிப்பு கொண்டு வெளியாக உள்ள முதல் ஸ்மார்ட்போன் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்ப்ளஸ் நிறுவனம் திங்கட்கிழமையான இன்று வெளியிட்டுள்ள தன் அறிவிப்பில் ஒன்ப்ளஸ் 7 Pro, HDR 10+ திரையுடன் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளது. இந்த HDr 10+ திரை, தற்போது வெளியாகி வரும் சில விலை உயர்ந்த தொலைக்காட்சிகளில் காணப் பெறலாம். இது HDR வீடியோக்களை சிறந்த முறையில் காண உதவும் ஒரு தொழில்நுட்பம். இதன் பார்வைக்கு ஏற்ப தானாக ஒளியை சரி செய்துகொள்ளும் திறன் சிறந்த HDR அனுபவத்தை நமக்கு தரும். யூடியூப் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள ஒன்ப்ளஸ் நிறுவனம், தன் மொபைல் போன்களுக்கான திரையை வரும் காலத்தில் இந்த இரு நிறுவனங்களிலும் வெளியாகும் அதிக தெளிவுடைய வீடியோக்களை காணும் வண்ணம் வடிவமைத்துள்ளது. 4000நிட்ஸ் ஒளிர்வு கொண்ட HDR 10+ திரை இதற்கு முன் இருந்த HDR 10-இன் திரையை ஒப்பிடுகையில் மிக அதிகம். HDR 10 திரை 3000நிட்ஸ் ஒளிர்வு கொண்டது. சந்தையில் உள்ள ஸ்மார்ட்போன்களில் சாம்சங் கேலக்ஸி S10 மற்றும் S10+ ஆகிய ஸ்மார்ட்போன்கள் HDR 10+ திரை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது
இவ்வளவு ஒளிர்வு கொண்ட திரை ஒருவேளை நம் கண்களை பாதித்து விடுமோ என்று அச்சப்பட்டால், அந்த அச்சத்தை போக்கியுள்ளது VDE என்ற ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு தொழில்நுட்ப- அறிவியல் சமூகம். அதன்படி இந்த திரையை ஆராய்ந்த VDE சோதனை நிறுவனம், இந்த திரை "கண்களுக்கு பாதுகாப்பானது" என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி 90Hz திரை புதுப்பிப்பு வேகம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் QHD+ திரை கொண்டது. டிஸ்ப்லேமேட் (DisplayMate) எண்ற நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் திரைக்கு A+ தகுதி கொடுத்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பேட் லவ் கூறுகையில், "HDR 10+ திரை, வருங்கால தொலைக்காட்சிகள் மட்டுமல்ல, ஸ்மார்ட்போன்களின் வருங்காலத்தையும் மாற்றும். ஸ்மார்ட்போன் தொழில்துறையில் எங்களது இந்த ஸ்மார்ட்போன் ஒரு சாதனை கல்லாக இருக்கும் என நம்புகிறேன். இது பார்வையாளர்களின் பார்வை அனுபவத்தை மாற்றியமைக்கும். இதுபோன்ற தரமான தொழில்நுட்பத்தை இந்த உலகிற்கு அளிப்பதில் நாங்கள் முதன்மை இருக்கிறோம் என்பதை எண்ணி பெருமைப் படுகிறோம்" என்றார்.
அதுமட்டுமின்றி லவ் கூறுகையில் இந்த ஸ்மார்ட்போன் அதிவேக 3.0 சேமிப்பு திறன் கொண்டு வெளியாக உள்ளது என்று குறிப்பிட்டார். இது குறித்து லவ் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிடுகையில், அதிவேக 3.0 சேமிப்பு திறனுடன் சந்தைக்கு வந்திருக்கும் முதல் ஸ்மார்ட்போன் இதுவே. மற்ற மொபைல் போன்களுடன் ஒப்பிடுகையில் இதன் வேகம் அதிகமாக இருக்கும் என கூறி பெருமிதம் கொண்டார்.
இதன் முந்தைய வகையான அதிவேக 2.1 செமிப்பு திறன் கொண்ட ஸ்மார்ட் போன்களுடன் ஒப்பிடுகையில் இந்த அதிவேக 3.0 சேமிப்பு திறன் கொண்ட ஸ்மார்ட் போன்களின் வேகம் இரு மடங்கு அதிகமாக இருக்கும். இதன் அதிகபட்ச டேட்டா விகிதம் (data rate) 23.2Gbps வேகத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரம் ஒரு முடுக்குக்கான வேகம் 11.6Gbps ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களான சாம்சங் கேலக்ஸி S10 வகை போன்கள் மற்றும் ஹுவேய் P30 Pro ஆகிய ஸ்மார்ட் போன்களில் அதிவேக 2.1 செமிப்பு திறன் கொண்டே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் அதிவேக 3.0 சேமிப்பு திறன் கொண்டே வெளியாகும் என அறிவித்திருந்தாலும், அதன் வெளியீட்டில் ஏற்பட்ட தாமதத்தால், அதிவேக 3.0 சேமிப்பு திறன் கொண்டு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெயரை ஒன்ப்ளஸ் 7 Pro தட்டிஞ் சென்றது.
12GB RAM மற்றும் 256GB சேமிப்பு அளவு கொண்டு வெளியாகும் இந்த ஒன்ப்ளஸ் 7 Pro-வின் விலை இந்திய சந்தையில் Rs.49,999 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் மூன்று பின்புற கேமராக்கள் உள்ளது என்பது இதன் தனிச் சிறப்பு.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்