Photo Credit: OnLeaks
ஒன்ப்ளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட் போன் மூன்று நிற வண்ணங்களில் வர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நெபுலா ப்ளூ, மிரர் க்ரே மற்றும் ஆல்மண்டு வண்ணங்களில் இந்த போன் சந்தையில் கிடைக்கும் எனப்படுகிறது. இந்த மூன்று வகைகள் குறித்த தகவல்களும் ஆன்லைனில் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ஒன்ப்ளஸ் 7 ப்ரோ குறித்த முழு தகவல்களும் லீக் ஆகியுள்ளதாக தெரிகிறது. அதன்படி, 3 வகை ரேம், 3 வகை சேமிப்பு வசதி, டூயல் சிம் ஸ்லாட், 48 மெகா பிக்சல் கேமரா, இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் உள்ளிட்ட வசதிகள் போனில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஸ்லாஷ்லீக்ஸ் தளத்தில் ஒன்ப்ளஸ் 7 ப்ரோ குறித்தான அனைத்து விபரங்களும் லீக் ஆகியுள்ளன. அதன்படி ஒன்ப்ளஸ் 7 ப்ரோவில், டூயல் நானோ சிம் கார்டு ஸ்லாட், ஆண்ட்ராய்டு பைய் மூலம் இயங்கும் ஆக்சிஜன் ஓஎஸ், 6.67 இன்ச் ஃப்ளூயிட் ஆமோலெட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 ஆக்டா-கோர் ப்ராசஸர், அடர்னோ 640 ஜிபியூ உள்ளிட்ட அட்டகாச வசதிகளை பெற்றிருக்கலாம்.
அதேபோல 6ஜிபி + 128ஜிபி UFS நாண்டு ஃப்ளாஷ் மெமரி, 8ஜிபி + 256ஜிபி UFS நாண்டு ஃப்ளாஷ் மெமரி, 12ஜிபி + 256ஜிபி UFS நாண்டு ஃப்ளாஷ் மெமரி வகைகளில் இந்த போன் சந்தையில் கிடைக்கப்பெறும் எனப்படுகிறது.
கேமரா பிரிவைப் பொறுத்தவரை, பின்புறத்தில் 48 மெகா பிக்சல் சென்சார், 16 மெகா பிக்சல் சென்சார், 8 மெகா பிக்சல் சென்சார் கொண்ட மூன்று கேமராக்கள் அமைந்திருக்கும் எனப்படுகிறது.
16 மெகா பிக்சல் சென்சார் கொண்ட செல்ஃபி கேமராவும் போனில் இருக்குமாம். 4,000 எம்.ஏ.எச் பேட்டரி மூலம் ஒன்ப்ளஸ் 7 ப்ரோ பவரூட்டப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. 162.6x75.9x8.8 எம்.எம் கொண்ட டைமன்ஷன்களை இந்த போன் கொண்டிருக்கலாம்.
மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர் சப்போர்ட் மற்றும் இன்னும் அட்டகாசமாக வசதிகளை இந்த போனில் பொருத்தப்பட்டிருக்கலாம். ஆனால், இந்த தகவல்கள் ஓன்ப்ளஸ் நிறுவனத்தால் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்களின் நம்பகத்தன்மையை தெரிந்து கொள்ள, மே 14 ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும். அன்று உலக சந்தையில் ஓன்ப்ளஸ் 7 ப்ரோ வெளியிடப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை 49,999 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்