Photo Credit: ஸ்லாஷ் லீக்ஸ்
ஓன்பிளஸ் 7 போனின் கவர் கேஸ் ஆன்லைனில் கசிந்துள்ளது. இந்த கேஸின் புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து போனின் சில முக்கிய டிசைன்கள் குறித்து நம்மால் கணிக்க முடிகிறது.
ஓன்பிளஸ் நிறுனத்தின் முக்கிய தயாரிப்பான ஓன்பிளஸ் 7 போன் பாப்-ஆப் செல்ஃபி கேமராவை கொண்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் இந்த கேஸின் புகைப்படத்தில் இருந்து ஓன்பிளஸ் போனிற்கு மூன்று பின்புற கேமராக்கள் இருக்கும் என யூகிக்க முடிகிறது.
கேஸின் புகைப்படத்தில் போனின் மேற்புறத்தில் ஒரு துவாரம் இருப்பதைக் காண முடிகிறது. இதனால் அந்த இடத்தில் பாப்-ஆப் செல்ஃபி கேமராகள் இருப்பதற்கு அதிக வாய்புள்ளது. மேலும் வால்யூம் பட்டன்கள் வலது புறத்திலும், பவர் பட்டன் இடது புறத்தில் அமைந்திறுப்பதும் வெளியான புகைப்படங்களில் இருந்து நம்மால் கண்டறிய முடிகிறது.
போனின் கீழே ஸ்பீக்கர்கான இடமும், யுஎஸ்பி டைப்-சி போர்டிற்கான இடமும் உள்ளன. ஓன்பிளஸ் 7 தயாரிப்பு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்கப்படுகிறது. இந்நிலையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனம் தங்களது இயர்பட்ஸ் மற்றும் கேலக்ஸி பட்ஸ் தயாரிப்பை வெளியீடும் போது ஓன்பிளஸ் போனும் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.
இதுவரை வெளியான தகவல் கசிவுகளின்படி, ஸ்னாப்டிராகன் 885 SoC, செல்ஃபி பாப்-ஆப் கேமரா மற்றும் பேசல்-இல்லாத திரை வசதியை இந்த ஓன்பிளஸ் 7 போன் பெற்றிருக்கும் எனத் தெரிகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்