ஆண்ட்ராய்டு அப்டேட்டில் தாமதிக்கும் ஒன் பிளஸ்!

விளம்பரம்
Written by Aditya Shenoy மேம்படுத்தப்பட்டது: 17 அக்டோபர் 2018 20:51 IST
ஹைலைட்ஸ்
  • ஒன் பிளஸ் 3/3டி, 5/5டி போனை வைத்திருப்பவர்கள் ஆண்ட்ராய்டு பையினை பெறுவதற்
  • ஒன்பிளஸ் 6டி ஆண்ட்ராய்டு பையினை பெற்றுள்ளது.
  • ஒன்பிளஸ் 6டி இந்த மாத இறுதியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் தங்களுடைய ஸ்மார்ட் போன்களில் சாப்ட்வேர் மற்றும் செக்கியூரிட்டி அப்டேட்களை உடனுக்குடன் கொண்டு வந்துவிடும். இந்தியாவில் ஆண்ட்ராய்டு பையை பெற்றிருக்கும் ஒரு சில போன்களில் ஒன்பிளஸ்6 (ரூ34,999) ஒன்றாகும். இந்நிறுவனம் தங்களுடைய பிற ஸ்மார்ட்போன்களான, ஒன்பிளஸ் 3, ஒன்பிளஸ் 3டி, ஒன்பிளஸ்5 (ரூ.35,999) மற்றும் ஒன்பிளஸ் 5டி (ரூ.37,999) ஆகியவற்றையும் ஆண்ட்ராய்டு பையாக அப்டேட் செய்வதாக கூறியிருந்தது. ஆனால், தற்போது இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 6டி குறித்து அதன் சிஇஓ பேசுகையில், ஒன்பிளஸ் 3, ஒன்பிளஸ் 3டி, ஒன்பிளஸ் 5 மற்றும் ஒன்பிளஸ் 5டி போன்களில் ஆண்ட்ராய்டு பையினை அப்டேட் செய்ய டெவலப்பர்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. இதில் ஒன்பிளஸ் 3/3டி இந்த இரு போன்களும் பழைய மாடல் என்பதால், அப்டேட் செய்வதில் இருக்கும் சிக்கல்களை உணரமுடியும். இருப்பினும் ஒன்பிளஸ் 5/5டி பயன்படுத்துபவர்களை தான் இது மிகவும் ஏமாற்றமடையச் செய்யும் என்று கூறினார்.

Advertisement

ஒன்பிளஸ் நிறுவனம் ஜூலை மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அதில், ஒன்பிளஸ் 3/3டி-யில் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவினை விடுத்து நேரடியாக ஆண்ட்ராய்டு பைக்கு அப்டேட் செய்யப்போவதாக கூறியது. அதன்பிறகு, ஒன்பிளஸ் 6, ஒன்பிளஸ்5/5டி, ஒன்பிளஸ் 3/3டியில் ஆண்ட்ராய்டு பை அப்டேட் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாயின, ஆனால் தற்போது ஒன்பிளஸ் 6ல் ஆண்ட்ராய்டு பை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 5/5டி மற்றும் 3/3டி அப்டேட்டிற்காக காத்திருக்கின்றன.

ஒன்பிளஸ் 6டி ஆண்ட்ராய்டு பையினை பெற்றிருக்கும். இது வரும் 30ம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus, OnePlus 3, OnePlus 3T, Oneplus 5, OnePlus 5T, Android Pie
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.