சீனாவில் ஓன்பிளஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஓன்பிளஸ் 3 மற்றும் ஓன்பிளஸ் 3T போன்களுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம் ஹைட்ரோஜன் ஓஎஸ் மென்பொருள் மற்றும் ஏப்ரல் 2019 பாதுகாப்பு பாட்ச் அமைப்புகளை இந்த ஓன்பிளஸ் போன்கள் பெருகின்றனர். இந்த அப்டேட் தற்போது எல்லோருக்கும் பொதுவான ஒரு பீட்டா தளத்தில் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த அப்டேட்டில் கேம் மோட் 3.0 என்ற புதிய அமைப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைப்பின் மூலம் கேம் விளையாடும் வேளையில் நோட்டிபிகேஷன் போன்றவைகளை 'டூ நாட் டிஸ்டர்ப்' மோட் கொண்டு தவிர்க்க முடிகிறது.
இந்த ஆண்ட்ராய்டு 9 பைய் அப்டேட் எல்லா ஓன்பிளஸ் 3 மற்றும் 3T வாடிக்கையாளர்களுக்கு இன்னும் வெளியாகவில்லை. இந்த அப்டேட் வேண்டுமானால் 'பைடு' தளத்தில் இருந்து இதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
சீனாவில் மட்டுமே இந்த ஓன்பிளஸ் போன்களுக்கான அப்டேட் வெளியாகியுள்ள நிலையில் உலகமெங்கும் உள்ள ஓன்பிளஸ் 3 மற்றும் ஓன்பிளஸ் 3T போன்களுக்கான அப்டேட் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு வெளியான ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அப்டேட் வசதியை ஓன்பிளஸ் 3 மற்றும் ஓன்பிளஸ் 3T போன் மாடல்கள் பெறாத நிலையில், ஆண்ட்ராய்டு 9 பைய் அப்டேட்களை இந்த இரண்டு மாடல்களுக்கும் நிச்சயம் கிடைக்கும் என ஓன்பிளஸ் நிறுவனம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்