5,100 எம்ஏஎச் பேட்டரியுடன் நுபியா ப்ளே கேமிங் போன் அறிமுகம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 22 ஏப்ரல் 2020 14:48 IST
ஹைலைட்ஸ்
  • நுபியா ப்ளே, சோனி சென்சாருடன் 48 மெகாபிக்சல் பிரதான ஸ்னாப்பரை கொண்டுள்ள
  • இது 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,100 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது
  • இந்த போனில், ICE 2.5 ரேக் பொருத்தப்பட்ட திரவ குளிரூட்டும் முறையை உள்ளது

நுபியா ப்ளே ஒரு சாய்வு பூச்சுடன் மூன்று வண்ணங்களில் வருகிறது

சமீபத்திய கேமிங் போனான Nubia Play சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த போன், 144Hz AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. போனின் விலை மற்றும் விவரங்களுக்கு இங்கே படிக்கவும்.


நுபியா ப்ளே விலை:

போனின் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை சீனாவில் சிஎன்ஒய் 2,399 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.26,000)-யாகவும்,
அதன் 8 ஜிபி + 128 ஜிபி பதிப்பு சிஎன்ஒய் 2,699 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.29,000)-யாகவும்,
போனின் டாப்-எண்ட் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் சிஎன்ஒய் 2,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.32,500)-யாகவும் உள்ளது. 
புதிய நுபியா போன் கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை கலர் ஆப்ஷன்களில் வருகிறது. இது ஏப்ரல் 24 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும். 

நுபியா ப்ளே ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765G SoC-யால் இயக்கப்படுகிறது

நுபியா ப்ளே விவரங்கள்:

இந்த போன், டூயல்-சிம் (நானோ) ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இது, நுபியா யுஐ 8.0 உடன் Android 10-ல் இயக்குகிறது. இந்த போன், 144Hz புதுப்பிப்பு வீகிதம் மற்றும் 240Hz டச் மாதிரி விகிதத்துடன் 6.4 அங்குல முழு எச்டி + (1,080x2,340 பிக்சல்கள்) டிஸ்பிளே உள்ளது. இது 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 765G SoC-யால் இயக்கப்படுகிறது. குறிப்பாக, போனின் வெப்பத்தை குறைக்க ICE 2.5 ரேக்-ஏற்றப்பட்ட திரவ குளிரூட்டும் முறை உள்ளது.

Nubia பிளேயின் குவாட் ரியர் கேமரா அமைப்பில், சோனி ஐஎம்எக்ஸ் 582 சென்சார் உடன் 48 மெகாபிக்சல் பிரதான ஸ்னாப்பர் உள்ளது. இது 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்காக, 12 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

நுபியா ப்ளே, 256 ஜிபி யுஎஃப்எஸ் 2.1  ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இது 30W PD ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,100mAh பேட்டரி உள்ளது. இந்த போனில் அங்கீகாரத்திற்காக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளது.

 
KEY SPECS
Display 6.65-inch
Processor Qualcomm Snapdragon 765G
Front Camera 12-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 5100mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Nubia, Nubia Play Price, Nubia Play Specifications, Nubia Play
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டிசைனிங் கத்துக்கணுமா? அடோப் டூல்ஸ் இப்போ ஃப்ரீ! இந்திய மாணவர்களுக்கு 'அடோப்' தந்த செம்ம கிப்ட்
  2. WhatsApp குரூப்ல இப்போதான் சேர்ந்தீங்களா? கவலைப்படாதீங்க! பழைய 100 மெசேஜ்களை இனி நீங்க படிக்கலாம்
  3. ஜியோ ஹாட்ஸ்டார் சாட்ஜிபிடி வேற லெவல் என்டர்டைன்மென்ட்! இனி நம்ம ஊர் மொழியிலேயே பேசி படங்களைத் தேடலாம்
  4. சாட்ஜிபிடி இப்போ நம்ம காலேஜுக்குள்ளயே வந்துடுச்சு! 1 லட்சம் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கோர்ஸ்.. ஓபன் ஏஐ-யின் அதிரடி பிளான்
  5. டெல்லியில் 1,100-க்கும் மேற்பட்ட போலி நதிங், CMF பொருட்கள் பறிமுதல்! கூகுள் போல நதிங் நிறுவனமும் எச்சரிக்கை - முழு விவரம்
  6. இனி இன்டர்நெட் வேகம் வேற லெவல்ல இருக்கும்! கடலுக்கு அடியில் கூகுள் போடும் புதிய கேபிள் ரூட்கள்
  7. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜியோவின் மெகா கிப்ட்! ரூ.1457 பெனிபிட்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
  8. Pixel 10a வந்தாச்சு மக்களே! தரமான கேமரா, வேற லெவல் பேட்டரி.. ஐபோனுக்கு செம்ம டஃப் கொடுக்கும் போலயே
  9. இனி டேட்டா கேபிள் தேவையில்லை! Pixel 9 போன் வச்சிருக்கீங்களா? ஐபோனுக்கு அசால்ட்டா ஃபைல் அனுப்பலாம்
  10. மே 19-ல் கூகுள் போடப்போகும் மெகா பிளான்! Android 17 முதல் Gemini AI வரை - முழு விபரம் இதோ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.