நோக்கியா சி2 வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக வெளியிடப்பட்டது. 3ஜி இயக்கப்பட்ட Nokia C1-ன் தொடரான நோக்கியா சி2 4ஜி இயக்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். புதிய நோக்கியா சி2 ஸ்மார்ட்போனின் விவரங்களான ரோல்அவுட் தேதி மற்றும் விலை இந்த வாரம் எச்எம்டி குளோபல் நிகழ்வில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி ஜூஹோ சர்விகாஸும் (Juho Sarvikas) தனது சமூக வலைத்தளங்களில் போனை வெளியிட்டார், அதே நேரத்தில் நோக்கியாவின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வ விவரக்குறிப்புகள் வெளிவந்தன. பின்னிஷ் நிறுவனத்திடமிருந்து கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுவதால் இந்தியாவில் இந்த போன் அறிமுகம் செய்யப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
Our most affordable 3G Nokia smartphone just got a buddy in 4G. Meet Nokia C2 bringing affordable 4G to selected markets. It's big. It's bold. It's brilliant. #NokiaC2 pic.twitter.com/eKqrvpU0bZ
— Juho Sarvikas (@sarvikas) March 15, 2020
ஃபின்னிஷ் நிறுவனம் ஸ்மார்ட்போனின் விலையை இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், Nokia C2-வின் விலை ரூ.10,000-க்கு கீழ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 19-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நோக்கியா வெளியீட்டு நிகழ்வின் போது மேலும் பல வெளியிடப்படும். நோக்கியாவின் தாய் நிறுவனமான HMD Global நோக்கியாவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போனான Nokia 8.2 5G-யையும் ஆன்லைன் வெளியீட்டு நிகழ்வின் போது லண்டனிலிருந்து வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியாவின் website-ல் கிடைக்கும் விவரக்குறிப்பு தாளின் படி, நோக்கியா சி2, 5.7 இன்ச் எச்டி + திரை மற்றும் 1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. போன் ஸ்டோரேஜ் திறனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (64 ஜிபி வரை) விரிவாக்க முடியும். இந்த போன் குவாட் கோர் 1.4GHz யுனிசாக் பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை (கோ பதிப்பு)-ல் இயங்குகிறது.
கேமராவைப் பொறுத்தவரை, எல்.ஈ.டி ஃபிளாஷ் உடன் போனின் முன் மற்றும் பின்புறம் இரண்டிலும் 5 மெகாபிக்சல் கேமரா இணைக்கப்பட்டுள்ளது. நோக்கியா சி2, 2,800 எம்ஏஎச் நீக்கக்கூடிய பேட்டரியையும் கொண்டுள்ளது மற்றும் 4 ஜி, 3.5 மிமீ ஜாக் மற்றும் எஃப்எம் ரேடியோ போன்ற இணைப்பு விருப்பங்களைக் கொண்டுள்ளது. இது கூகுள் அசிஸ்டெண்ட் பொத்தானைக் கொண்டுள்ளது.
Nokia சி2, 154.8 x 75.59 x 8.85 மிமீ (உயரம் x அகலம் x தடிமன்) மற்றும் 161 கிராம் எடையைக் கொண்டுள்ளது. இந்த போன் சியான் மற்றும் கருப்பு வண்ணங்களில் வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்