இந்தியாவில் 'நோக்கியா 6.1' ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை குறைப்பின்படி நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 6,999 ரூபாயிற்கு விற்பனையாகவுள்ளது. தற்போது, இந்த ஸ்மார்ட்போன், குறைக்கப்பட்ட விலை நோக்கியா இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 3GB RAM + 32GB சேமிப்பு மற்றும் 4GB RAM + 64GB சேமிப்பு என இரண்டு வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமானது. ஸ்னேப்ட்ராகன் 630 எஸ் ஓ சி ப்ராசஸர், 3,000mAh பேட்டரி போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
'நோக்கியா 6.1' ஸ்மார்ட்போன்: விலை!
நோக்கியா தளத்தில் மட்டுமே, இந்த குறைக்கப்பட்ட விலையில் விற்பனையிலுள்ள இந்த ஸ்மார்ட்போன், 3GB RAM + 32GB சேமிப்பு அளவு ஸ்மார்ட்போன் 6,999 ரூபாய் என்ற விலையிலும், 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையில் உள்ளது.
இந்த விலை குறைப்பு அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களின் தளத்தில் எதிரொலிக்கவில்லை.
இந்த ஸ்மார்ட்போன் சென்ற ஆண்டு 16,999 ரூபாய் என்ற துவக்க விலையுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விலை குறைப்பிற்கு முன்னதாக, நோக்கியா தளத்தில், 3GB RAM + 32GB சேமிப்பு அளவு நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்ற விலையிலும், 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 10,999 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
'நோக்கியா 6.1' ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள்!
அண்ட்ராய்ட் பை அமைப்பு கொண்டு செயல்படும் இந்த நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன், 5.5-இன்ச் FHD+ திரை, 16:9 திரை விகிதம் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் ஸ்னேப்ட்ராகன் 630 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் அளவிலான பின்புற கேமராவையும், 8 மெகாபிக்சல் அளவிலான முன்புற செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
3,000mAh அளவிலான பேட்டரியையும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் v5.0, USB டைப்-C சார்ஜிங் போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகியவற்றையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்