Android 10 அப்டேட் பெறும் Nokia 6.1...!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 9 ஜனவரி 2020 11:43 IST
ஹைலைட்ஸ்
  • Nokia 6.1 பயனர்கள் அப்டேட்டை பெறுவதற்கான ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்கின்றனர்
  • ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டின் பதிப்பு எண் v4.10C உடன் வருகிறது
  • Nokia 6.1 Plus, Nokia 7 Plus இந்த வாரம் ஆண்ட்ராய்டு 10-ஐ பெற்றது

Nokia 6.1, OTA அப்டேட் மூலம் சமீபத்திய Android மென்பொருளைப் பெறுகிறது

Nokia 6.1 Plus மற்றும் Nokia 7 Plus-க்குப் பிறகு, Nokia 6.1 போனும், சமீபத்திய ஆண்ட்ராய்டு 10 மென்பொருள் அப்டேட்டை பெறத் தொடங்கியது. புதிய ஆண்ட்ராய்டு 10 அப்டேட் system-wide dark mode, gesture navigation, smart reply, அதிக granular privacy controls, focus mode, family link, மற்றும் பல அம்சங்களைக் கொண்டுவருகிறது. கடந்த ஆண்டு, Nokia 7.1 மற்றும் Nokia 9 PureView போன்ற போன்கள் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெற்றிருப்பதைக் கண்டோம். இப்போது HMD குளோபல் நிறுவனத்திடமிருந்து அதிகமான போன்கள், சமீபத்திய மென்பொருளுடன் புதுப்பிக்கப்படுகின்றன. இந்த அப்டேட், 2020 முதல் காலாண்டில் Nokia 2.2, Nokia 3.1 Plus, Nokia 3.2 மற்றும் Nokia 4.2 ஆகியவற்றுக்கும் வெளியிடப்படும்.

Nokia 6.1 பயனர்களுக்கான ஆண்ட்ராய்டு 10 மென்பொருளின் வெளியீட்டை உறுதிப்படுத்த HMD குளோபல் ட்விட்டருக்கு அழைத்துச் சென்றது. அப்டேட்டைப் பெறுவதற்கான ஸ்கிரீன் ஷாட்களையும் பயனர்கள் பகிர்கின்றனர். மேலும், இந்த அப்டேட், டிசம்பர் 2019 பாதுகாப்பு இணைப்பை கொண்டுவருவதாக ஸ்கிரீன் ஷாட்கள் கூறுகின்றன. பயனர்கள் தங்கள் போனில் அப்டேட் குறித்த அறிவிப்பைப் பெற வேண்டும். ஆனால், அவர்கள் வெறவில்லையென்றால், அப்டேட்டை மேனுவலாக சரிபார்க்க பரிந்துரைக்கப்படுகிறது. Settings > About Phone > System updates > Check for update-க்கு சென்று அப்டேட்டப் பெற்றிருக்கிறீர்களா இல்லையா என்பதை மேனுவலாக சரிபார்க்கவும்.

ஸ்கிரீன் ஷாட்கள் Nokia 6.1 அப்டேட்டுக்கான பதிப்பு எண்ணும் v4.10C என்றும், அதன் அப்டேட் அளவு 1444.3MB என்றும் காட்டுகிறது. இன்ஸ்டாலேஷன் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன்பு பயனர்கள் குறைந்தது 2GB இடமாவது இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள். Nokia 6.1 ஏப்ரல் 2018-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன், 5.5-inch full-HD IPS டிஸ்பிளே, Snapdragon 630 SoC, ஒற்றை 16-megapixel சென்சார், 8-megapixel செல்ஃபி சென்சார் மற்றும் 3,000mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Nokia 7 Plus Android 10 Update Starts Rolling Out

Nokia 6.1 Plus Starts Receiving Android 10 Update With December Security Patch, Dark Mode, More

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great performance
  • Stellar build quality
  • Android One and no software bloat
  • Good battery life
  • Bad
  • Poor low-light camera performance
  • Iffy fingerprint sensor
 
KEY SPECS
Display 5.50-inch
Processor Qualcomm Snapdragon 630
Front Camera 8-megapixel
Rear Camera 16-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3000mAh
OS Android 8.0
Resolution 1080x1920 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: HMD Global, Android 10
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone 17e வருது! பட்ஜெட் ஐபோன்ல இப்போ மேக்சேஃப் சப்போர்ட்.. சிங்கிள் கேமராவோட தரமான சம்பவம் பண்ணப்போற ஆப்பிள்
  2. சாம்சங், ஐபோனுக்கே டஃப் கொடுக்க ஷாவ்மி ரெடி! Xiaomi 17 Ultra-வோட குளோபல் ரெண்டர்ஸ் லீக்.. அந்த 200MP ஜூம் வேற லெவல்
  3. பிக்சல் 10ஏ-ல இவ்வளவு சூப்பர் கலர்ஸா? லீக்கான 4 மாஸ் கலர்கள் இதோ! பிப்ரவரி 18-க்காக வெயிட்டிங்
  4. கனவு விலையில் Vivo V50 5G! Flipkart-ல் மெகா டிஸ்கவுண்ட்.. 6000mAh பேட்டரி, Zeiss கேமரா இப்போ இவ்வளவு கம்மி விலையிலா?
  5. இனி பிளாக்ஷிப் போன் பட்ஜெட் விலையில்! Samsung Galaxy S24 FE இப்போ Amazon-ல் செம சீப்.. மிஸ் பண்ணிடாதீங்க
  6. ஸ்மார்ட்போன் ஹிஸ்டரிலயே இப்படி ஒரு பேட்டரியா? 7,400mAh உடன் மிரட்டும் iQOO 15 Ultra! கேமர்களுக்கு இதுதான் இனி ஒரே சாய்ஸ்
  7. பிக்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்! Google Pixel 10a எப்போ வருது தெரியுமா? டிசைன் மற்றும் கலர் டீசர் ரிலீஸ்
  8. விவோவோட அடுத்த தரமான போன் ரெடி! Geekbench-ல் மிரட்டும் Vivo V70 Elite.. பட்ஜெட்ல ஒரு பிளாக்ஷிப் போனா?
  9. விலை குறைந்தது OnePlus 13! பிளிப்கார்ட்டில் ரூ.12,000 வரை சேமிக்க ஒரு சூப்பர் வாய்ப்பு. ஆஃபரை எப்படி பெறுவது?
  10. S26 Ultra-வோட புது கலர்ஸ் பார்த்தீங்களா? சாம்சங் ரசிகர்களுக்குப் பிடிச்ச அந்த ஒரு கலர் திரும்ப வருது! டிசைன்லயும் பெரிய மாற்றம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.