Nokia 6.1 Plus மற்றும் Nokia 7 Plus-க்குப் பிறகு, Nokia 6.1 போனும், சமீபத்திய ஆண்ட்ராய்டு 10 மென்பொருள் அப்டேட்டை பெறத் தொடங்கியது. புதிய ஆண்ட்ராய்டு 10 அப்டேட் system-wide dark mode, gesture navigation, smart reply, அதிக granular privacy controls, focus mode, family link, மற்றும் பல அம்சங்களைக் கொண்டுவருகிறது. கடந்த ஆண்டு, Nokia 7.1 மற்றும் Nokia 9 PureView போன்ற போன்கள் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெற்றிருப்பதைக் கண்டோம். இப்போது HMD குளோபல் நிறுவனத்திடமிருந்து அதிகமான போன்கள், சமீபத்திய மென்பொருளுடன் புதுப்பிக்கப்படுகின்றன. இந்த அப்டேட், 2020 முதல் காலாண்டில் Nokia 2.2, Nokia 3.1 Plus, Nokia 3.2 மற்றும் Nokia 4.2 ஆகியவற்றுக்கும் வெளியிடப்படும்.
Nokia 6.1 பயனர்களுக்கான ஆண்ட்ராய்டு 10 மென்பொருளின் வெளியீட்டை உறுதிப்படுத்த HMD குளோபல் ட்விட்டருக்கு அழைத்துச் சென்றது. அப்டேட்டைப் பெறுவதற்கான ஸ்கிரீன் ஷாட்களையும் பயனர்கள் பகிர்கின்றனர். மேலும், இந்த அப்டேட், டிசம்பர் 2019 பாதுகாப்பு இணைப்பை கொண்டுவருவதாக ஸ்கிரீன் ஷாட்கள் கூறுகின்றன. பயனர்கள் தங்கள் போனில் அப்டேட் குறித்த அறிவிப்பைப் பெற வேண்டும். ஆனால், அவர்கள் வெறவில்லையென்றால், அப்டேட்டை மேனுவலாக சரிபார்க்க பரிந்துரைக்கப்படுகிறது. Settings > About Phone > System updates > Check for update-க்கு சென்று அப்டேட்டப் பெற்றிருக்கிறீர்களா இல்லையா என்பதை மேனுவலாக சரிபார்க்கவும்.
ஸ்கிரீன் ஷாட்கள் Nokia 6.1 அப்டேட்டுக்கான பதிப்பு எண்ணும் v4.10C என்றும், அதன் அப்டேட் அளவு 1444.3MB என்றும் காட்டுகிறது. இன்ஸ்டாலேஷன் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன்பு பயனர்கள் குறைந்தது 2GB இடமாவது இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள். Nokia 6.1 ஏப்ரல் 2018-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன், 5.5-inch full-HD IPS டிஸ்பிளே, Snapdragon 630 SoC, ஒற்றை 16-megapixel சென்சார், 8-megapixel செல்ஃபி சென்சார் மற்றும் 3,000mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Nokia 7 Plus Android 10 Update Starts Rolling Out
Nokia 6.1 Plus Starts Receiving Android 10 Update With December Security Patch, Dark Mode, More
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்