ஆண்டிராய்டு 9 பை அப்டேட் பல முன்னணி போன்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த நிலையில், முதன்முறையாக நோக்கியா 2.1 பட்ஜெட் ஸ்மார்ட்போனுக்கு இந்த ஆண்டிராய்டு அப்டேட் கிடைத்துள்ளது. ஹெச்எம்டி குளோபல் (நோக்கியா) நிறுவனத்தின் தலைமைத் தயாரிப்பு நிர்வாகி ட்விட்டரில் இது குறித்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் நோக்கியா 2.1 அறிமுகம் செய்யப்படட்ட நிலையில், ஓரே வருடத்தில் இந்த புதிய ஆண்டிராய்ட் அப்டேன் கிடைக்க உள்ளது. ரூபாய் 5,649-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த போனில் அப்டேட் சென்று சேர்வதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும். 500 எம்பி டேட்டா இந்த அப்டேட்டை பதிவிறக்கும் செய்யத் தேவைப்படும்.
நோக்கியா 2.1 அமைப்புகள்:
5.5 இஞ்ச் ஹெச்டி திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், குவால்கோம் ஸ்னாப்டிராகன் 425 SoC பிராசஸ்சரை கொண்டுள்ளது. 1 ஜிபி ரேம் மட்டுமே இந்த போனில் உள்ள நிலையில் பேட்டரி வசதி 4000mAh ஆக உள்ளது. கேமரா வசதிகளைப் பொறுத்தவரை 8 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் சென்சார் இந்த கேமராவில் உள்ளன. அதுபோல செல்ஃபிகளுக்காக பிரத்தியேகமாக 5 மெகா பிக்சல் கேமரா சென்சார் பொறுத்தப்பட்டுள்ளது. 3.5 mm ஹெட்போன் ஜாக், ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற பல இதர வசதிகளும் இந்த போனில் உள்ளது.
ஹெச்எம்டி டிராகன்ஸ் பொறுத்தவரை தனது ஆண்டிராய்ட் 9 பை அப்டேட்டை நோக்கியா 8, நோக்கியா 6 (2017), நோக்கியா5, நோக்கியா 8 சிரோக்கோ, நோக்கியா 5.1 ப்ளஸ், நோக்கியா 7.1, நோக்கியா 6.1 மற்றும் நோக்கியா 7 ப்ளஸ் ஆகிய போன்களுக்கும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்