மோட்டோரோலா ஒன் ஹைப்பர் இறுதியாக, கடைசி நிமிட கசிவுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்டது. 32-மெகாபிக்சல் சென்சாருடன் பாப்-அப் செல்பி கேமரா தொகுதி பொருத்தப்பட்ட முதல் மோட்டோரோலா-பிராண்டட் ஆண்ட்ராய்டு போன் இதுவாகும். மோட்டோரோலா ஒன் ஹைப்பர் 64-மெகாபிக்சல் பிரதான கேமராவையும், முழுத்திரை டிஸ்பிளேவையும் notch அல்லது hole-punch இல்லாமல் பேக் செய்த முதல் போனாகும். இது octa-core Qualcomm Snapdragon 675 SoC-யால் இயக்கப்படுகிறது.
Motorola One Hyper-ன் விலை:
மோட்டோரோலாவின் முதல் 64-மெகாபிக்சல் போனான மோட்டோரோலா ஒன் ஹைப்பர் அதன் ஒரே வேரியண்டிற்காக $399.99 (சுமார் ரூ. 29,000) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய சந்தைகளில் ஏற்கனவே கிடைக்கிறது. இது Deep Sea Blue, Dark Amber மற்றும் Fresh Orchid வண்ண விருப்பங்களில் வருகிறது. வரவிருக்கும் மாதங்களில் சில மத்திய கிழக்கு சந்தைகளிலும் இந்த போன் வரும். ஆனால், அது இந்திய சந்தைகளுக்கு எப்போது வரும் என்பதில் எந்த வார்த்தையும் இல்லை.
Motorola One Hyper-ன் விவரக்குறிப்புகள்:
டூயல்-சிம் (நானோ) Motorola One Hyper, வெண்ணிலா ஆண்ட்ராய்டு 10-ஐ இயக்குகிறது. இது 19:9 aspect ratio மற்றும் pixel density of 395ppi உடன் 6.5-inch full-HD+ (1080 x 2340 pixels) LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மோட்டோரோலா இந்த வடிவமைப்பை டோட்டல் விஷன் (Total Vision) என்று அழைக்கிறது. ஏனெனில், இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களான Vivo V17 Pro மற்றும் Oppo Reno 2 போன்ற இணையாக முழு திரை அனுபவத்தையும் வழங்குகிறது.
Motorola ஒன் ஹைப்பர் 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டு, Qualcomm-ன் octa-core Snapdragon 675 SoC-யால் இயக்கப்படுகிறது. சுவாரஸ்யமாக, புதிய மோட்டோரோலா போன் பின்புறத்தில் இரண்டு கேமராக்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அதன் மலிவு உடன்பிறப்புகளில் மூன்று பின்புற கேமராக்கள் இருந்தன.இது f/1.9 lens மற்றும் 0.8 micron pixel size உடன் இருக்கும் 64-megapixel சென்சார், பிரதான snapper ஆகும்.இது ஒரு பெரிய 1.6 micron pixel-ஐ உருவாக்கிய பிறகு 16-megapixel புகைப்படங்களைப் பிடிக்க குவாட் பிக்சல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
பிரதான கேமராவுடன் f/2.2 aperture மற்றும் 118-degrees field of view உடன் 8-megapixel wide-angle lens உள்ளது. pop-up கேமரா தொகுதியில் f/2.0 aperture மற்றும் 0.8 micron pixel size உடன் 32-megapixel செல்ஃபி கேமராவைக் கொண்டதாகும். இது பிரகாசமான 8-megapixel pixel-bin செய்யப்பட்ட புகைப்படங்களைப் பிடிக்க குவாட் பிக்சல் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது. கேமரா அம்சங்களில் Night Vision, RAW capture, hi-res zoom மற்றும் fill-HD 60fps வீடியோக்கள் ஆகியவை அடங்கும்.
மோட்டோரோலா ஒன் ஹைப்பர் 128 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜை வழங்குகிறது. இது microSD card வழியாக (1TB வரை) விரிவாக்கப்படலாம். போனின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11/b/g/n/ac, Bluetooth 5.0, GPS, A-GPS, LTEPP, SUPL, GLONASS மற்றும் Galileo ஆகியவை அடங்கும். இது 45W ஹைப்பர் சார்ஜ் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இருப்பினும், சில்லறை தொகுப்பில் 15W டர்போபவர் சார்ஜருடன் பொருத்தப்பட்டிருக்கும், 45W சார்ஜர் சில பிராந்தியங்களில் தனித்தனியாக விற்கப்படும்.
மோட்டோரோலா ஒன் ஹைப்பரில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light சென்சார், compass, fingerprint சென்சார், gyroscope, proximity சென்சார் மற்றும் SAR (Specific Absorption Rate) சென்சார் ஆகியவை அடங்கும். இந்த போன் 161.8 x 76.6 x 8.9mm அளவீட்டையும் 200 கிராம் எடையையும் கொண்டதாகும். போனில் நீர் விரட்டும் வடிவமைப்புடன் பிளாஸ்டிக் உருவாக்கம் உள்ளது. மேலும் USB Type-C port மற்றும் 3.5mm headphone jack உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்