மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் போர்ட்ஃபோலியோவின் சமீபத்திய கூடுதலாக ஒன் ஃப்யூஷன் ப்ளஸ், ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் + இப்போது அதிகாரப்பூர்வமாக இருக்கும்போது, மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் மாடல் இன்னும் வெளியிடப்படவில்லை. புதிய மோட்டோரோலா தொலைபேசியின் பின்புறம் குவாட் ரியர் கேமராக்கள் மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. நான்கு பின்புற கேமராக்களில் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவை உள்ளன. தொலைபேசி பின்புற கைரேகை சென்சாரையும் பேக் செய்கிறது, மேலும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் சப்போர்டுடன் வருகிறது.
மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி வேரியண்டிற்கு தோராயமாக ரூ.25,400 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ட்விலைட் ப்ளூ மற்றும் மூன்லைட் வைட் என தொலைபேசி இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது. மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் ஐரோப்பாவில் சிறிது நாட்களில் விற்பனைக்கு வரும், எனினும், சரியான கிடைக்கும் தன்மை இன்னும் அறியப்படவில்லை மற்றும் பிற சந்தைகளில் அதன் வெளியீடு இந்த நேரத்தில் ஒரு மர்மமாகவே உள்ளது.
இரட்டை சிம் (நானோ) கொண்ட மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் மற்ற லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா சாதனங்களைப் போலவே ஆண்டிராய்டு 10ல் இயங்குகிறது. இது 6.5 இன்ச் ஃபுல்-எச்டி + (1,080x2,340 பிக்சல்கள்) 19.5:9 விகிதம் மற்றும் 395 பிபி பிக்சல் நாட்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 730 SoC ஆல் இயக்கப்படுகிறது, இது அட்ரினோ 618 ஜி.பீ.யூ மற்றும் 6 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. உள் சேமிப்பு 128 ஜி.பியில் உள்ளது, மேலும் தொலைபேசியில் மைக்ரோ எஸ்.டி கார்டு (1TB வரை) பயன்படுத்தி சேமிப்பக விரிவாக்கத்தை ஆதரிக்கிறது.
மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸின் பின்புறத்தில் உள்ள குவாட் ரியர் கேமராக்களில் எஃப் / 1.8 கொண்ட 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, எஃப் / 2.2 கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, எஃப் / 2.4 கொண்ட 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், மற்றும் எஃப் / 2.4 கொண்ட 2 மெகாபிக்சல் சென்சார். முன்பக்கம், பாப்-அப் கேமரா கொண்ட 16 மெகாபிக்சல் செல்பி சென்சார் எஃப் / 2.2 கொண்டுள்ளது.
இந்த தொலைபேசி 5,000 எம்ஏஎச் பேட்டரியை 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பேக் செய்கிறது, இது இரண்டு நாட்கள் வரை நீடிக்கும். மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் இணைப்பு விருப்பங்களில் புளூடூத் வி 5, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் இரட்டை 4 ஜி வோல்டிஇ ஆகியவை அடங்கும். மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸில் பின்புற கைரேகை சென்சார் உள்ளது. மேலும் இது பிரத்யேக கூகிள் அசிஸ்டென்ட் பொத்தானையும் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்