மிகவும் எதிர்பார்க்கப்படும் 'மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன்' வெளியாகும் தேதி தெரிந்தது!?

விளம்பரம்
Written by Gaurav Shukla மேம்படுத்தப்பட்டது: 10 ஆகஸ்ட் 2019 13:53 IST
ஹைலைட்ஸ்
  • ஒன் ஆக்‌ஷனில் ஆக்டா கோர் எக்சினோஸ் 9609 எஸ்.ஓ.சி ப்ராசஸர் இருக்கும்
  • மோட்டோரோலா ஒன் வரிசையில் இந்த போன் வரும்
  • 4ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பு வசதிகளை இந்த போன் பெற்றிருக்கும்

இந்த போனின் விலை அநேகமாக 23,500 ரூபாயை ஒத்திருக்கலாம்.

Photo Credit: WinFuture

வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி மோட்டோரோலா நிறுவனம், புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை வெளியிடுவதற்கு அழைப்பிழ் அனுப்பியுள்ளது. அன்று மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன் போன்தான் வெளியிடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. மோட்டோரோலா ஒன் வரிசையில் வரவுள்ள இந்த போன் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. ஆனால் அமேசான் ஜெர்மனி நிறுவனம், இது குறித்த சிறப்பம்சங்களைப் பட்டியலிட்டுள்ளது. முன்னதாக வெளியான மோட்டோரோலா ஒன் விஷன், மோட்டோரோலா ஒன், மோட்டோரோலா ஒன் பவர் வரிசையில் இந்த மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன் வெளியாகும். 

ஆகஸ்ட் 23 ஆம் தேதி மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன்தான் வெளியிடப்படுமா என்பது குறித்து எந்தவித தகவலும் இல்லையென்றாலும், #CaptureTheAction என்ற ஹாஷ்-டேக் அதை உணர்த்துவது போலவே இருக்கிறது. 

அமேசான் ஜெர்மனி வெளியிட்ட தகவல்படி, மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷனில், ஹோல்-பன்ச் டிஸ்ப்ளே, 21:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 1080X2520 பிக்சல் ரிசல்யூஷன், 6.3 இன்ச் டிஸ்ப்ளே உள்ளிட்ட வசதிகளைப் பெற்றிருக்கும் எனத் தெரிகிறது. 

இதைத் தவிர ஆக்டா கோர் எக்சினோஸ் 9609 எஸ்.ஓ.சி ப்ராசஸர், 4ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பு வசதி உள்ளிட்ட வசதிகளையும் ஒன் ஆக்ஷன், கொண்டிருக்கும். 

கேமராக்களைப் பொறுத்தவரை மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷனில், 13 மெகா பிக்சல் முதன்மை ரியர் கேமரா, இன்னொரு வைட் - ஆங்கில் லென்ஸ் (அதன் திறன் எவ்வளவு என்று தெரியவில்லை), அதுமட்டுமல்லாமல் மூன்றாவது கேமராவின் திறனும் புதிராகவே உள்ளது.  3,500 எம்.ஏ.எச் பேட்டரி திறன், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ரியர் ஃபிங்கர் பிரின்ட் சென்சார், ஆண்ட்ராய்டு 9 பை இயங்கு மென்பொருள் வசதிகளால் போனின் திறன் மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது. இந்த போனின் விலை அநேகமாக 23,500 ரூபாயை ஒத்திருக்கலாம். மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன் அதிகாரபூர்வமாக இந்தியாவில் வெளியாகும்போது மேலும் தெளிவான தகவல்கள் கிடைக்கும். 


 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality and unique design
  • Lag-free performance
  • Stock Android experience
  • Bad
  • Small battery and slow charging
  • Disappointing display quality and content scaling issues
  • Can’t capture still photos with ultra-wide camera
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Samsung Exynos 9609
Front Camera 12-megapixel
Rear Camera 12-megapixel + 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2520 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Motorola One Action, Motorola One Action Specifications, Motorola
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்த வாரத்தின் சிறந்த OTT வெளியீடுகள் (மார்ச் 9 - மார்ச் 15): என்னென்ன படங்கள்ன்னு பாருங்கள்
  2. Samsung Galaxy M17e 5G இந்திய விலை லீக் – மார்ச் 17 அறிமுகத்திற்கு முன் தகவல்
  3. Motorola அறிமுகப்படுத்திய Motorola Edge 70 Fusion+ – Triple Camera, 5,200mAh பேட்டரி
  4. iPhone Fold-ல் iPad போன்ற UI, Split-Screen Apps ஆதரவு வரலாம்
  5. James Webb Space Telescope-ன் புதிய கண்டுபிடிப்பு: Jupiter ஆரோராவில் Io, Ganymede தடயங்கள்
  6. Meta Platforms மோசடி தடுப்பு கருவிகளை விரிவுபடுத்துகிறது – WhatsApp-ல் புதிய Device Link எச்சரிக்கை
  7. Xiaomi 17 Ultra இந்தியாவில் அறிமுகம் – 200 மெகாபிக்சல் Leica கேமரா, தொடர்ச்சியான Optical Zoom: விலை மற்றும் அம்சங்கள்
  8. Vivo Y51 Pro 5G இந்தியாவில் அறிமுகம் – 7,200mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் கேமரா: விலை மற்றும் விவரங்கள்
  9. iPhone 17 Pro கேமரா சோதனையில் Samsung Galaxy S26 Ultra-வை முந்தியது: DxOMark மதிப்பீடு
  10. OnePlus 15T வெள்ளை நிற மாடல் மற்றும் டிஸ்ப்ளே அம்சங்கள் வெளியீடு; சீனாவில் Pre-Order தொடக்கம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.