ஜி7 வரிசையில் ஏற்கெனவே மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ள நிலையில் அதன் அடுத்த ஜி7 தயாரிப்பை தற்போது வெளியிட மோட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
6.24 ஹெச்டி திரை கொண்ட மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன், வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் ஆக்டா-கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 632 SoC போன்ற பல முக்கிய அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது.
மோட்டோ ஜி7 விலை:
மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் விலை பற்றிய எந்தத் தகவல்களும் இன்னும் வெளியாகாத நிலையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,700க்கு விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் எக்ஸ்க்ளூசிவ் போனாக இந்த தயாரிப்பு இருக்குமா என இன்னும் அறியப்படாத நிலையில் இதற்கு முன்னர் வெளியான ஜி7 பவர் ஸ்மார்ட்போன் ரூ.13,499க்கு ஃபிளிப்கார்ட் மற்றும் ஆஃபலைன் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மோட்டோ ஜி7 அமைப்புகள்:
இரண்டு சிம்கார்டு ஸ்லாட், கோர்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ள 6.24 இஞ்ச் முழு ஹெச்டி திரை ஆகியவை இருப்பது இந்த போனுக்கு சிறப்பு சேர்க்கிறது. ஆக்டா கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 632 SoC மற்றும் 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது.
கேமரா வசதிகளைப் பொறுத்தவரை மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் 12 மற்றும் 5 மெகா பிக்சல் சென்சார்களை கொண்டுள்ளது. முன்புறத்தில் 8 மெகா பிக்சல் கேமரா சென்சாரும் இந்த தயாரிப்பில் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த தயாரிப்பில் 64 ஜிபி சேமிப்பு வசதியும் 512 ஜிபி வரை தாங்கும் எஸ்டி கார்டு வசதியும் இடம் பெற்றுள்ளன.
பேட்டரி பவரைப் பொறுத்தவரை 3,000mAh பேட்டரியும் 15W டர்போ பவர் சார்ஜிங் சப்போர்டும் இந்த போனில் இடம் பெற்றுள்ளதாக மோட்டோ நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்