இந்தியாவில் மோட்டோ ஜி-7 பிளஸ் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. போனின் அமைப்புகள் பற்றிய சில தகவல்கள் வந்துள்ள நிலையில் வெளியாகும் தேதி இன்னும் வெளிவரவில்லை.
ஜி 7 போன்களின் வரிசையில் இருந்த ஜி7 பவர் ஸ்மார்ட்போன் கடந்த மாதம் இந்தியாவில் வெளியாகியுள்ள நிலையில் மற்ற தயாரிப்புகளான மோட்டோ ஜி7 பிளஸ் மற்றும் மோட்டோ ஜி7 பிளே ஸ்மார்ட்போன்களும் வெளியாகலாம் என தகவல் கசிந்துள்ளது.
மோட்டோ ஜி7 விலை: (எதிர்பார்க்கப்படுவது)
மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,300 வரை எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்ற போன்களான மோட்டோ ஜி7 பிளஸ் ரூ. 24,500க்கும் , மோட்டோ ஜி7 பிளே ரூ.14,200 க்கும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சேராமிக் பிளாக் மற்றும் சேராமிக் வையிட் போன்ற நிறங்களில் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் வெளியாகும் தேதி மற்றும் இதர தகவல் பற்றிய எந்த தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.
மோட்டோ ஜி7 அமைப்புகள்:
இரண்டு சிம்கார்டு ஸ்லாட், கோர்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ள 6.24 இஞ்ச் முழு ஹெச்டி திரை ஆகியவற்றையுடையது. ஆக்டா கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 632 SoC மற்றும் 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது.
கேமரா வசதிகள் பொருத்தவரை மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் 12 மற்றும் 5 மெகா பிக்சல் கேமராவை கொண்டுள்ளது. முன்புறத்தில் 8 மெகா பிக்சல் கேமரா சென்சாரும் இந்த தயாரிப்பில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த தயாரிப்பில் 64 ஜிபி சேமிப்பு வசதியும் 512 ஜிபி வரை தாங்கும் எஸ்டி கார்டு வசதியும் இடம்பெற்றுள்ளது.
பேட்டரி பவர் பொருத்தவரை 3,000mAh பேட்டரியும் 15W டர்போ பவர் சார்ஜிங் சப்போர்டும் இந்த போனில் இடம்பெற்றுள்ளதாக மோட்டோ நிறுவனம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்