‘மோட்டோ ஜி7’ ரிலீஸ் தேதி லீக்..!?- பரபர தகவல்கள்

‘மோட்டோ ஜி7’ ரிலீஸ் தேதி லீக்..!?- பரபர தகவல்கள்

Photo Credit: DroidShout

ஹைலைட்ஸ்
  • ஜி7, ஜி7 ப்ளஸ், ஜி7 ப்ளே, ஜி7 பவர் ஆகிய போன்கள் ரிலீஸாகும்
  • ஜி6 போன்களுக்கு மாற்றாக இவை இருக்கும்
  • பிரேசிலில் ஜி7 அறிமுக நிகழ்ச்சி நடைபெறலாம்
விளம்பரம்

மோட்டோரோலா நிறுவனத்தின் அடுத்த சீரஸ் செல்போன்களான ‘ஜி7', இன்னும் இரண்டே மாதத்தில் உங்கள் கைகளில் தவழ வாய்ப்புள்ளது. ஆம், வரும் பிப்ரவரி மாதம் மோட்டோரோலா நிறுவனம் ஜி7 போன்களை, பிரேசிலில் நடக்கும் விழாவில் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது.

லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமான மோட்டோரோலாவுக்கு, பிரேசில் நாட்டில் மிகப் பெரிய சந்தை இருக்கிறது. அதனால்தான் அங்கு ‘மோட்டோ ஜி7' போன்களை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25 முதல் 28-க்குள் ‘உலக மொபைல் காங்கிரஸ்' நடக்கிறது. நமக்கு வந்த தகவல்படி, அந்த மாபெரும் மொபைல் திருவிழா ஆரம்பிப்பதற்கு முன்னரே, ஜி7 போன்களை மோட்டோரோலா அறிமுகம் செய்யத் துடித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

moto g7 power play renders droidshout Moto G7 Power  Moto G7 Play

 

இதற்குக் காரணம், மொபைல் காங்கிரஸ் விழாவில் உலகின் பல நிறுவனங்கள் எக்கச்சக்க போன்களை கொட்டி இறைக்கும். அப்போது, பல சிறிய போன்கள் அடையாளம் தெரியாமல் போக வாய்ப்புள்ளது. அதை கணித்துத்தான் முன் கூட்டியே, மோட்டோரோலா, ஜி7 போன்களை அறிமுகம் செய்ய முயற்சி எடுத்து வருகிறது.

பிப்ரவரி மாதம், மோட்டோ ஜி7, ஜி7 ப்ளஸ், ஜி7 ப்ளே, ஜி7 பவர் ஆகிய போன்கள் வெளியாகலாம். தற்போது சந்தையில் இருக்கும் ஜி6 போன்களுக்கு இது மாற்றாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஜி7-ன் சிறப்பு அம்சங்கள்:

கவால்கம் டிராகன் 660 எஸ்.ஓ.சி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு வசதி, 2820 எம்.ஏ.எச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 9 பை போன்ற சிறப்பு வசதிகளை ஜி7 போன்கள் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.


play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Moto G7, Moto G7 Power, Moto G7 Play, Moto G7 Plus, Motorola
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »