Moto G Pro ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுவாரஸ்யமாக, மோட்டோ ஜி புரோ இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட Moto G Stylus-ன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகத் தெரிகிறது. தற்போது, இந்த போன் வாங்குவதற்கு கிடைக்கவில்லை. இருப்பினும் வாடிக்கையாளர்கள் மோட்டோரோலா ஜெர்மனி தளம் மூலம் அதன் வரவிருக்கும் விற்பனை குறித்த தகவல்களை பதிவு செய்யலாம்.
மோட்டோ ஜி புரோ 4 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை யூரோ 329 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.27,400). இந்த போன் மிஸ்டிக் இண்டிகோ வண்ணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டூயல்-சிம் (நானோ) மோட்டோ ஜி ப்ரோ ஆண்ட்ராய்டு 10-ல் இயங்கும். இது 6.4 அங்குல முழு எச்டி + (1080x2300 பிக்சல்கள்) மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனின் உள்ளே குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
மோட்டோ ஜி ப்ரோவில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 16 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும். இந்த கேமரா அமைப்பில் டைம்-ஆஃப்-ஃப்ளைட் (டோஃப்) சென்சார் உள்ளது. செல்பி எடுக்க 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
இணைப்பிற்காக, இந்த போனில் 4 ஜி எல்டிஇ, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், எல்டிஇபிபி, எஸ்யூபிஎல், க்ளோனாஸ் மற்றும் கலிலியோ ஆகியவை உள்ளது. போனின் உள்ளே 15W டர்போபவர் சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்படுகிறது. மோட்டோ ஜி புரோவின் எடை 192 கிராம் ஆகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்