இன்னும் ஒரு சில வாரங்களில் வரவிருக்கும் ‘உலக மொபைல் காங்கிரஸ் 2019' நிகழ்ச்சியை முன்னிட்டு எல்ஜி நிறுவனம் தனது மூன்று புதிய படைப்புகளை, ரிலீஸ் தேதிக்கு முன்னரே அறிமுகம் செய்ய உள்ளது.
தனது அடுத்தகட்ட படைப்புகளான எல்ஜி கியூ60, எல்ஜி கே50 மற்றும் எல்ஜி கே40 ஆகிய மூன்று போன்களை, எல்ஜி நிறுவனம், வெளியிட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. பார்சிலோனாவில் நடக்கவிருக்கும் ‘உலக மொபையில் காங்கிரஸ் 2019' நிகழ்ச்சியில் இந்த போன்கள் வெளியாகலாம்.
எல்ஜி கியூ60 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
இப்படி அறிமுகம் செய்யப்படும் இந்த மூன்று ஸ்மார்ட்போன்களில் எல்ஜி கியூ 60 ப்ரீமியம் போனாக திகழ்கிறது. மூன்று பின்புற கேமராக்கள், பின்புறத்தில் ஃபிங்கர்-பிரின்ட் சென்சார் மற்றும் வாட்டர் ட்ராப் வடிவத்தில் முகப்பு என அசத்தும் இந்த ஸ்மார்ட்போனில் 6.26 ஹெச்டி டிஸ்ப்ளே, 3ஜிபி ரேம் மட்டும் 64ஜிபி சேமிப்பு வசதியுடன் வெளியாகிறது.
பேட்டரி வசதியைப் பொறுத்தவரை 3,500mAh அளவு இருக்கும் எதிர்பார்கப்படுகிறது. இப்படி எல்லாவித அம்சங்களைப் பொருந்தியுள்ளதால் இந்த ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களை எளிதில் கவரலாம்.
ஆனால் எல்ஜி கே40 ஸ்மார்ட்போனோ இதற்கு எதிராக பட்ஜெட் போனாக வெளிவர உள்ளது. பின்புறத்தில் ஒரேயொரு கேமராவுடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன்.
எல்ஜி கே50 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
6.46 இஞ்ச் ஹெச்டி திரை கொண்டுள்ள இந்த எல்ஜி கே50 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம்/32 ஜிபி சேமிப்பு வசதியுடன் வெளியாகிறது. இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 13 மெகா பிக்சல் முதற்கட்ட சென்சாரும், 2 மெகா பிக்சல் சென்சாரும் உள்ளன. இத்துடன் 13 மெகா பிக்சல் செல்ஃபி சென்சாரும், 3,500mAh பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது.
எல்ஜி கே40 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
எல்ஜி கே40 ஸ்மார்ட்போனை பொறுத்தவரை 5.7 இஞ்ச் ஹெச்டி டிஸ்ப்ளே, 2ஜிபி ரேம்/ 32ஜிபி சேமிப்பு வசதியுடன் வெளியாக உள்ளது. 16 மெகா பிக்சல் கொண்ட பின்புற கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் கொண்ட செஃல்பி கேமாரவை இந்த போன் கொண்டுள்ளது. அதுபோல் பேட்டரி வசதியைப் பொறுத்தவரை 3,000mAh பவர் பேட்டரியை கொண்டுள்ளது.
மேலும் இந்த ‘உலக மொபைல் காங்கிரஸ் 2019' நிகழ்ச்சில் எல்ஜி ஜி8 மற்றும் எல்ஜி வி50 திங்கியூ 5ஜி போன்களும் வெளியாகலாம் என எதிர்பார்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்