iQoo Z9s 5G செல்போன் வந்ததும் வந்தது எல்லாமே டாப்பு தான்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 13 ஆகஸ்ட் 2024 11:35 IST
ஹைலைட்ஸ்
  • iQoo Z9s சாதனங்கள் விவோவின் கிரேட்டர் நொய்டா ஆலையில் தயாரிக்கப்படுகிறது
  • Flamboyant Orange மற்றும் Luxe Marble ஃபினிஷ் வண்ணங்களில் கிடைக்கிறது
  • அமேசான் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது

Photo Credit: Gadgets 360

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது iQoo Z9s 5G மற்றும் iQoo Z9s Pro 5G செல்போன்கள். 

விவோவின் துணை நிறுவனமான iQoo கடந்த ஏப்ரல் மாதம் சீனாவில் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென்3 சிப்செட்டுடன் கூடிய iQoo Z9 Turbo மொபைலை அறிமுகப்படுத்தியது. இந்த மொபைலை வரும் செப்டம்பர் இறுதிக்குள் உலகளவில் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இப்போது iQoo Z9s 5G மற்றும் iQoo Z9s Pro 5G ஆகிய செல்போன்கள் இந்தியாவில் ஆகஸ்ட் 21 அன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

iQoo Z9s 5G ஆனது Snapdragon 7 Gen 3 SoC சிப்செட் மூலம் இயங்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் iQoo Z9s 5G ஆனது MediaTek Dimensity 7300 சிப்பைக் கொண்டிருக்கும். இந்த இரண்டு செல்போன்களும் விவோவின் இந்திய ஆலையான கிரேட்டர் நொய்டா அருகே உள்ள கம்பெனியில் உற்பத்தி செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமேசான் தளம் வழியாக விற்பனைக்கு வர  இருக்கிறது. 

iQoo Z9s Pro 5G மற்றும் iQoo Z9s 5G ஆகியவை ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் சூப்பர் நைட் வசதியுடன் 50 மெகாபிக்சல் Sony IMX882 சென்சார் கேமராவுடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது OIS உடன் 4K வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டது. கேமரா அமைப்பு AI டெலிட் மற்றும் AI புகைப்பட மேம்படு அம்சங்களை வழங்கும். iQoo Z9s Pro 5G மாடலில் கூடுதலாக 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. அவை Flamboyant Orange மற்றும் Luxe Marble ஃபினிஷ்களில் கிடைக்கும். 

மேலும், iQoo Z9s செல்போன் தொடரில் 7.49mm தடிமன் கொண்ட 3D வளைந்த AMOLED டிஸ்ப்ளே இருக்கும். வெண்ணிலா மாடலின் திரை 1,800நிட்ஸ் பிரகாசத்தை வழங்கும். அதே சமயம் iQoo Z9s Pro 5G ஆனது 120Hz புதுப்பிப்பு வீதத்தையும் 4,500nits பிரகாசத்தையும் கொண்டிருக்கும். 5,500mAh பேட்டரி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட iQoo Z9 Turbo மொபைலானது 6,000mAh பேட்டரி மற்றும் 80W வயர்டு சார்ஜிங் சப்போர்ட்டை கொண்டிருந்தது. இரண்டு மாடல்களும் இந்தியாவில் 25 ஆயிரம் ரூபாய் என்ற விலை ரேஞ்சில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் வைஃபை, என்எப்சி, புளூடூத், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி சப்போர்ட் செய்கிறது. கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதியும் கொண்டுள்ளது. நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. இந்த செல்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது iQoo நிறுவனம்.
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Hubble Space Telescope மற்றும் Euclid Space Telescope இணைந்து எடுத்த Cat’s Eye Nebula-வின் புதிய அதிசயப் படம்
  2. Apple மடிக்கக்கூடிய iPhone ‘iPhone Ultra’ என அறிமுகமாகலாம்: விலை, மெமரி விவரங்கள் கசிந்தது
  3. Nothing Phone 4a, Nothing Phone 4a Pro இந்தியாவில் விற்பனைக்கு: விலை, சலுகைகள், அம்சங்கள்
  4. Poco X8 Pro Series – வெளியீட்டு தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்
  5. ChatGPT-இல் Chats-ஐ Delete மற்றும் Archive செய்வது எப்படி? – படிப்படியாக நீக்கும் முறைகள் இங்கே
  6. Realme 16T 5G, P4R 5G இந்தியாவில் விரைவில் அறிமுகம் – நிறங்கள், ஸ்டோரேஜ் தகவல் வெளியீடு
  7. இந்த வாரத்தின் சிறந்த OTT வெளியீடுகள் (மார்ச் 9 - மார்ச் 15): என்னென்ன படங்கள்ன்னு பாருங்கள்
  8. Samsung Galaxy M17e 5G இந்திய விலை லீக் – மார்ச் 17 அறிமுகத்திற்கு முன் தகவல்
  9. Motorola அறிமுகப்படுத்திய Motorola Edge 70 Fusion+ – Triple Camera, 5,200mAh பேட்டரி
  10. iPhone Fold-ல் iPad போன்ற UI, Split-Screen Apps ஆதரவு வரலாம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.