கொரோனா வைரஸ்: இந்தியாவில் ஐபோன் உற்பத்தி நிறுத்தம்! 

கொரோனா வைரஸ்: இந்தியாவில் ஐபோன் உற்பத்தி நிறுத்தம்! 

ஆப்பிள் அதன் முதன்மை ஐபோன் மாடல்களை இந்தியாவில் உருவாக்கவில்லை

ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் ஃபாக்ஸ்கான் & விஸ்ட்ரானால் ஐபோன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது
  • ஆப்பிள் நாட்டில் பழைய ஐபோன் மாடல்களை உற்பத்தி செய்கிறது
  • ஊரடங்கின் தாக்கத்தை ஷாவ்மியும் எதிர்கொள்ளும்
விளம்பரம்

செவ்வாய்க்கிழமை மாலை நாடு தழுவிய அளவில் மக்கள் ஊரடங்கு பிறப்பித்த நிலையில், இந்தியாவில் ஐபோன் உற்பத்தி குறைந்தது ஏப்ரல் 14 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாட்டில் ஐபோன் மாடல்களுக்கான இரண்டு உற்பத்தியாளர்களான ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான், அரசு உத்தரவுக்கு இணங்க, தங்கள் உற்பத்தி ஆலைகளை நிறுத்தியுள்ளன. சுவாரஸ்யமாக, ஆப்பிள் தவிர பல நிறுவனங்களின் இரு உற்பத்தி நிறுவனங்களும் முக்கிய உற்பத்தி கூட்டாளிகளாக உள்ளன, தற்போது நாட்டில் ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியில் இருக்கும் ஷாவ்மி உட்பட.

ஊரடங்கு உத்தரவுக்கு இணங்க ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் இந்தியாவில் உள்ள அனைத்து உற்பத்தி ஆலைகளையும் நிறுத்தியுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. ஃபாக்ஸ்கான் ஏப்ரல் 14 வரை அதன் உற்பத்திகளை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஒரு விஸ்ட்ரான் பிரதிநிதியும் ஊரடங்கை உறுதிப்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் எந்த குறிப்பிட்ட விவரங்களையும் குறிப்பிடாமல்.

எந்த சாதனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்களை Foxconn மற்றும் Wistron இரண்டும் வழங்கவில்லை. இருப்பினும், இரண்டு ஒப்பந்த உற்பத்தியாளர்கள் முக்கியமாக பழைய ஐபோன் மாடல்களை உற்பத்தி செய்கிறார்கள், அவை உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்கின்றன. iPhone XR மற்றும் iPhone SE போன்ற மாதிரிகள் இதில் அடங்கும்.

தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னலின் சமீபத்திய அறிக்கை, Apple தனது முதன்மை iPhone 11-ஐ இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் தயாரிக்கும் திட்டத்தை கொண்டிருக்கவில்லை என்றும், அதன் உற்பத்தியில் சீனாவை தொடர்ந்து நம்பியிருக்கும் என்றும் குறிப்பிட்டது - பல தொழிற்சாலைகளை பாதித்த கொரோனா வைரஸ் பாதித்த போதிலும்.

உற்பத்தி நிறுத்தம் குறித்த தெளிவுக்காக ஆப்பிள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் வினவல், இந்தக் கதையைத் தாக்கல் செய்யும் நேரத்தில் பதிலைப் பெறவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக ஐபோன் மாடல்களின் உற்பத்தியுடன், நாட்டில் பிற சாதன தயாரிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. Oppo, Realme, மற்றும் Vivo-வும் தங்கள் உள்ளூர் உற்பத்தி ஆலைகளை மூடிவிட்டன. ஃபாக்ஸ்கானின் ஆலையை மூடுவது நாட்டில் Xiaomiசாதனங்களின் உற்பத்தியையும் கணிசமாக பாதிக்கும்.

ஊரடங்கு முடிவைச் சமாளிக்க அதன் நடவடிக்கைகளை பற்றி கேட்ட மின்னஞ்சலுக்கு ஷாவ்மி செய்தித் தொடர்பாளர் பதிலளிக்கவில்லை.

கடந்த மாதம், ஒரு ஐடிசி அறிக்கை, ஷாவ்மி, இந்தியாவில் 28.6 சதவீத பங்குகளுடன் தனது முன்னணியில் தொடர்ந்தது, சாம்சங் 20.6 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தது. நாட்டின் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சந்தையானது ஆண்டுக்கு எட்டு சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது, மொத்த ஏற்றுமதி அளவுகள் 2019-ஆம் ஆண்டில் 152.2 மில்லியன் யூனிட்டுகளின் மைல்கல்லை எட்டியுள்ளன. இது 2018-ல் 141.1 மில்லியன் ஏற்றுமதிகளிலிருந்து அதிகரித்துள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: iPhone, Apple iPhone, Apple India, Foxconn, Wistron, Apple
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »