Photo Credit: Apple
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது iPhone 15 Plus செல்போன் பற்றி தான்.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய iPhone 16 Series மாடல்கள் சரியாக எப்போது அறிமுகமாகும் என்கிற வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பழைய ஐபோன் மாடல்கள் மீது திடீர் சலுகைகள் மற்றும் அபார தள்ளுப்படிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. நினைவூட்டும் வண்ணம் புதிய ஐபோன் 16 சீரீஸ் ஆனது வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி இரவு தொடங்கும் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
அதற்கு முன்னதாகவே iPhone 15 Plus மாடல் மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. iPhone 15 Plus ஆனது iPhone 15 , iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகியவற்றை உள்ளடக்கிய சீரியஸ் மாடலாக 2023ல் வெளியானது. iPhone 15 Plus மீது 18 சதவிகிதம் நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான Flipkart தளத்தில் அணுக கிடைக்கிறது. iPhone 15 Plus மாடலின் அசல் விலை என்ன? தள்ளுபடி பிறகான ஆபர் விலை என்ன? புதிய iPhone 16 Series விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? என பார்க்கலாம்.
iPhone 15 Plus விலை 128 ஜிபி மாடல் அசல் விலை ரூ 89,600 என உள்ளது. இது Flipkart இப்போது ரூ. 13,601 தள்ளுபடி போக ரூ. 75,999 என்கிற விலையில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் இன்னும் குறைவான விலையில் பெற எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பெறலாம். HSBC அல்லது ஃபெடரல் வங்கி கிரெடிட் கார்டு EMI பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ. 1,500 தள்ளுபடி கூடுதலாக கிடைக்கும். பாங்க் ஆஃப் பரோடா CARD வைத்திருப்பவர்கள் மற்றும் UPI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் நபர்கள் கூடுதலாக ரூ. 1,000 தள்ளுபடி கிடைக்கும்.
iPhone 15 Plus 256GB மற்றும் 512GB மாடல் தள்ளுபடி விலையில் ரூ. 85,999 மற்றும் ரூ. முறையே ரூ 1,05,999 என்கிற விலைக்கு கிடைக்கிறது. இவை ஆப்பிள் இணையதளத்தில் ரூ. 99,600 மற்றும் ரூ.1,19,600 என்கிற விலையில் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, ஐபோன் 16 வரிசையின் வரவிருக்கும் அறிமுகம் காரணமாக , ஐபோன் 15 ப்ளஸின் விலை, மற்ற ஐபோன் 15 சீரிஸ் கைபேசிகளின் விலைகளுடன், வரும் சில நாட்களில் நாட்டில் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்