Photo Credit: Infinix
இன்ஃபினிக்ஸ் நோட் 50X எண்கோண 'ஜெம்-கட்' கேமரா தொகுதியைக் கொண்டிருக்கும்
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போது நாம் பார்க்க இருப்பது Infinix Note 50X 5G செல்போன் பற்றி தான்.
Infinix Note 50X 5G விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரியவந்துள்ளது. Infinix Note 50X 5G செல்போன் பிளிப்கார்ட் வழியாக கிடைக்கும். Infinix நிறுவனம் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. வரவிருக்கும் இந்த மாடலின் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது. பிளிப்கார்ட் மைக்ரோசைட் செல்போன் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியீட்டிற்கு முந்தைய நாட்களில் வெளியிடப்படலாம். குறிப்பாக, இன்ஃபினிக்ஸ் இந்த வார தொடக்கத்தில் இந்தோனேசியாவில்பேஸிக் நோட் 50, நோட் 50 ப்ரோ மற்றும் நோட் 50 ப்ரோ+ ஆகியவற்றை வெளியிட்டது . இந்த வகைகளின் இந்திய வெளியீடு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
Infinix Note 50X 5G செல்போன் மார்ச் 27 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த போன் ஆக்டிவ் ஹாலோ லைட் அம்சத்துடன் வரும். இது அறிவிப்புகளுக்கு ஒளிரும், செல்ஃபி டைமராக செயல்படும். சார்ஜிங் நிலையைக் காண்பிக்கும் மற்றும் கேம் பூட்-அப் போது ஒரு டைனமிக் விளைவை உருவாக்கும்.
நிறுவனம் பகிர்ந்துள்ள ஒரு படத்தில், இன்ஃபினிக்ஸ் நோட் 50X 5G வெள்ளி நிறத்தில் எண்கோண ஜெம்-கட் கேமரா யூனிட்டுடன் தோன்றுகிறது. இதில் மூன்று சென்சார்கள், ஒரு LED ஃபிளாஷ் மற்றும் ஒரு ஆக்டிவ் ஹாலோ யூனிட் உள்ளன. கேமரா இன்ஃபினிக்ஸ் நோட் 50 போலவே தெரிகிறது . பிளிப்கார்ட் மைக்ரோசைட்டில் இந்த செல்போன் பற்றிட பல முக்கிய அம்சங்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கிறது.
குறிப்பாக, Infinix Note 50X, ஆகஸ்ட் 2024ல் இந்தியாவில் வெளியிடப்பட்ட Infinix Note 40X 5G-ஐ அடுத்து விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் MediaTek Dimensity 6300 SoC, 6.78-இன்ச் 120Hz முழு-HD+ திரை மற்றும் 18W வயர்டு சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் உடன் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. இது 108-மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா யூனிட் மற்றும் 8-மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டரைக் கொண்டுள்ளது. இந்த செல்போன் Android 14-அடிப்படையிலான XOS 14 உடன் வருகிறது.
அறிமுகப்படுத்தப்பட்டபோது, இன்ஃபினிக்ஸ் நோட் 40X இந்தியாவில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 14,999 விலையில் இருந்தது. அதே நேரத்தில் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 15,999 விலையில் இருந்தது. எதிர்பார்க்கப்பட்ட இன்ஃபினிக்ஸ் நோட் 50X நாட்டில் இதே போன்ற விலை வரம்பில் அறிமுகப்படுத்தப்படும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்