இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 சீரிஸ் மே 29 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 25 மே 2020 10:35 IST
ஹைலைட்ஸ்
  • இன்ஃபினிக்ஸ் ஹாட் 9-ஐ ஹாட் 9 ப்ரோவுடன் அறிமுகப்படுத்தலாம்
  • புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன்கள் மே 29 மதியம் 12 மணிக்கு அறிமுகமாகும்
  • இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்

பிளிப்கார்ட்டில் உள்ள இன்பினிக்ஸ் ஹாட் 9 சீரிஸ் டீஸரில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோவின் படம் இருப்பதாக தெரிகிறது

Photo Credit: Flipkart

இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 சீரிஸ் மே 29 அன்று இந்தியாவில் அறிமுகமாகும். இந்த தகவலை மின் சில்லறை விற்பனையாளர் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் சீரிஸின் இந்திய அறிமுகம் மே 20 அன்று இன்ஃபினிக்ஸ் சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. 

இப்போது பிளிப்கார்ட் இந்திய சந்தையில் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9-ஐ மே 29 அன்று கொண்டுவருவதாக அறிவித்துள்ளது. மின் சில்லறை விற்பனையாளர் வரவிருக்கும் போனின் எந்த விவரக்குறிப்புகளையும் அம்சங்களையும் வெளியிடவில்லை. ஆனால், இந்த டீஸரில் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ போனின் ஒரு பார்வை நமக்கு கிடைத்துள்ளது.

 
இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 சீரிஸ் வெளியீட்டு தேதி:

பிளிப்கார்ட் முகப்புப்பக்கத்தில் வெளியிடப்பட்ட பேனரின் படி, Infinix Hot 9 சீரிஸ் மே 29 அன்று மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும். இந்த சீரிஸில் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 மற்றும் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 புரோ ஆகிய இரண்டு மாடல்கள் இருக்கலாம். இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அதே மாதிரியாக இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 இருக்கலாம். அதே நேரத்தில் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ இந்த போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்கும்.

இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ:

பிளிப்கார்ட் தனது இணையதளத்தில் டீஸர் பக்கத்தில் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ப்ரோவின் புகைப்படத்தைப் பகிர்ந்தது. டீஸர் படம் போனின் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு மற்றும் கைரேகை சென்சார் ஆகியவற்றைக் காட்டுகிறது. கூடுதலாக, திரையின் மேல் இடது மூலையில் ஹோல்-பஞ்ச் கட்அவுட் கொடுக்கப்பட்டுள்ளது. டி.டி.எஸ் ஆடியோ பிராண்டிங் போனின் கீழ் பின்புறத்திலும் தோன்றும்.

பிளிப்கார்ட், போனின் பெயரைக் கொடுக்கவில்லை என்றாலும், கேமரா அமைப்பில் 48 மெகாபிக்சல்கள், அதன் முதன்மை சென்சாராக இருக்கும். இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்ஃபினிக்ஸ் ஹாட் 9-ஐப் பார்த்தால், அதன் பின்புறத்தில் 16 மெகாபிக்சல் முதன்மை ஷூட்டர் உள்ளது. பிளிப்கார்ட்டில் காட்டப்பட்டுள்ள போன் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ப்ரோவாக இருக்கும் என்பதை தெளிவாகக் காட்டுகிறது.


விவரங்கள்:

இன்ஃபினிக்ஸ் ஹாட் 9-ல் 6.6 இன்ச் ஐபிஎஸ் எச்டி + எல்சிடி டிஸ்ப்ளே, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ 25 செயலி, 4 ஜிபி ரேம் மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. கேமராக்களைப் பொறுத்தவரை, போனின் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவும் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பும் உள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Modern-looking design
  • Good battery life
  • Selfie flash
  • Bad
  • Below-average camera performance
  • Spammy UI
  • Weak processor
 
KEY SPECS
Display 6.60-inch
Processor MediaTek Helio P22
Front Camera 13-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 720x1600 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் சியோமி பேட் 8 இன் விலை உயர்ந்தது: இப்போது அதன் விலை எவ்வளவு என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்
  2. இந்தியாவில் வாங்குபவர்களின் முடிவுகளில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் முக்கிய பங்கு வகிப்பதாக மெட்டா ஆய்வு கூறுகிறது
  3. கூகுள் ஜெமினி அவதார் மூலம் பயனர்கள் தங்களை உள்ளடக்கிய AI வீடியோக்களை உருவாக்கலாம்
  4. சியோமி 17T, விவோ X200T மற்றும் சாம்சங் A57 போன்களின் விலை, அம்சங்கள் மற்றும் சிறப்பம்சங்களின் முழு ஒப்பீடு
  5. வி இந்தியாவில் சமூக ஊடகங்களில் அதிவேக சரிபார்ப்பிற்காக சைலண்ட் மொபைல் வெரிஃபிகேஷனை அறிமுகம் செய்கிறது
  6. சியோமி டிவி FX மினி எல்இடி சீரிஸ் இந்தியாவில் 75 அங்குலம் வரையிலான திரையுடன் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  7. சியோமி 17T இந்தியாவில் 6,500mAh பேட்டரி மற்றும் லைக்கா கேமராவுடன் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  8. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+ இந்தியாவில் 6,500mAh பேட்டரி மற்றும் 50MP கேமராவுடன் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  9. ஆண்ட்ராய்டில் போலி அழைப்புகளைக் கண்டறியும் புதிய பாதுகாப்பு வசதியை கூகுள் உலகளவில் அறிமுகம் செய்கிறது
  10. அனைத்து பயனர்களுக்கும் 'எக்ஸ்டெண்டட்' திங்கிங் மோடுடன் ஜெமினி திங்கிங் லெவல்களை வெளியிடுகிறது கூகுள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.