ஹானர் மொபைல்ஸ் நிறுவனம் 8 ஜிபி ரேம் மெமரியுடன் அட்டகாசமான மொபைலை வெளியிட்டுள்ளது. ஹானர் எக்ஸ் 10 சீரிஸ் என பெயரிடப்பட்டுள்ள இந் த மொபைலின் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.
5,000 ஆம்ப் பேட்டரி திறன் கொண்ட இந்த மொபைல் 22.5 வாட்ஸ் வேகமான சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலையைப் பொறுத்தளவில், 6 ஜி.பி. ரேமும், 64 ஜி.பி. இன்டர்னல் மெமரியும் கொண்ட மொபைலின் விலை ரூ. 24,600 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6 ஜி.பி. ரேமும், 128 ஜிபி இன்டர்னல் மெமரியும் கொண்டமொபைல் ரூ. 27,800க்கும், 8 ஜிபி ரேமும், 128 ஜி.பி இன்பீல்டு மெமரியும் கொண்ட மொபைல் ரூ. 29,900க்கும் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹானர் எக்ஸ் 10 மேக்ஸ், லைட் சில்வர், ரேசிங் ப்ளூ, ஸ்பீட் பிளாக் ஆகிய வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஜூலை 2-ம்தேதி இந் த மொபைல் வெளியிடப்படுகிறது.
பெரிய டிஸ்ப்ளே இதன் சிறப்பம்சமாக இருக்கிறது. 7.09 இன்ச் முழு எச்.டி. டிஸ்ப்ளேவை கொண்டதாக மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மீடியா டெக் டைமன்சிட்டி 800 5 ஜி, எஸ்.ஓ.சி. இயங்கு தளத்தை ஹானர் மொபைல் கொண்டுள்ளது.
48 மெகா பிக்சல் பிரைமரி கேமராவுடன், 8 மெகா பிக்சல் கொண்ட செல்பி கேமரா மொபைலில் பொருத்தப்பட்டுள்ளன.
கனெக்ட்டிவிட்டியை பொருததளவில் 3.5 எம்.எம். ஆடியோ ஜக், டைப் சி யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் ஆகியவை உள்ளன. 5,000 ஆம்ப் திறன் கொண்ட பேட்டரி மொபைலில் பொருத்தப்பட்டுள்ளது. 22.5 வாட்ஸ் வேகமான சார்ஜிங்கிற்கு இந்த பேட்டரி சப்போர்ட் செய்யும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்