ஹூவே நிறுவனத்தின் புதிய நடுவரிசை திறன்பேசியான ஆனர் ப்ளே (Honor Play) இன்று மாலை நான்கு மணி முதல் விற்பனைக்கு வருகிறது. இது பிரத்யேகமாக அமேசான் தளத்தில் மட்டுமே கிடைக்கும்.
4ஜிபி ரேம், 6ஜிபி ரேம் என இரு பிரிவுகளில் கிடைக்கும் இப்போன் கடந்த ஜூன் மாதமே சீனாவில் விற்பனைக்கு வந்துவிட்டது. இரண்டிலும் 64ஜிபி இன்டர்னல் மெமரியைக் கொண்டுள்ளது.
19.5:9 டிஸ்ப்ளே கொண்ட திரையும் இரு பின்பக்க கேமராக்களும் இதன் சிறப்பம்சம் ஆகும். மேலும் பேட்டரி பயன்பாட்டை 30% வரை குறைத்து, செயல்திறனை 60% அதிகரிக்கும் GPU Turbo தொழில்நுட்பம் இதன் மற்றுமொரு சிறப்பாகும்.
EMUI 8.2 செயற்கை நுண்ணறிவுத் (AI) திறனின் பல்வேறு அம்சங்களும் இதில் இடம்பெறுகின்றன. முகத்தை வைத்தே அன்லாக் வசதியும் இந்த போனில் உள்ளது.
இந்தியச் சந்தையில் ஆனர் ப்ளே 19,999 ரூபாய்க்கும் (4ஜிபி), 23,999 ரூபாய்க்கும் (6ஜிபி) கிடைக்கும். இன்று மாலை நான்கு மணி முதல் அமேசான் தளம், HiHonorStone ஆகியவற்றில் இது விற்பனைக்கு வருகிறது.
மிட்நைட் ப்ளாக், நேவி ப்ளூ என இரு நிறங்களில் இது வெளியாகிறது. ஓர் ஆண்டு வரை மாதத்துக்குக் கூடுதலாக 10ஜிபி டேட்டா, 999 ரூபாய் மதிப்பு கொண்ட ஓராண்டுக்கான அமேசான் ப்ரைம் சந்தா மற்றும் பல சலுகைகளுடன் இந்த மொபைல் Amazon.in தளத்தில் கிடைக்கும்.
ஆனர் ப்ளே 9 திறன் குறிப்பீடுகள் (specifications):
டூயல் சிம் வசதி (நானோ), EMUI 8.2, ஆண்டிராய்ட் 8.1 ஓரியோ. 6.3" திரை, ஃபுல் எச்டி (1080*2340), 19.5:9 அகல உயரத் தகவு. ஹூவே ஹைசிலிக்கான் கிரின் 970 SoC.
இரண்டு பின்புற கேமராக்கள் (16MP முதன்மை கேமரா, 2MP துணை கேமரா), PDAF ஆட்டோ போகஸ், எல்ஈடி ஃப்ளாஷ். முன்புறத்தில் 16 MP கேமரா.
64 ஜிபி இன்பில்ட் மெமரியை 256ஜிபி வரை மெமரி கார்டு (ஹைப்ரிட்) மூலம் நீட்டித்துக்கொள்ளலாம். 4G Volte, வைஃபை 802.11ac (2.4GHz & 5GHz), ப்ளூடூத் v4.2, யூஎஸ்பி - சி (v2.0), GPS/ A-GPS, 3.55மிமீ இயர்போன் ஜாக்.
அக்சலரோமீட்டர், ஆம்பியன்ட் லைட் சென்சார், டிஜிட்டல் காம்ப்பஸ், சுழல்காட்டி(gyrometer), நெருங்கமை உணரி (proximity sensor) ஆகிய சென்சார்களைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் கைரேகை சென்சாருக்கான வசதி உள்ளது.
176 கிராம் எடை கொண்ட ஆனர் ப்ளே போன், 157.91x74.27x7.48மிமீ அளவில் அமைகிறது. 3750mAh பேட்டரி கொள்ளளவு கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்