Honor 9X இன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. ஹவாய் துணை பிராண்ட் ஹானர், வெளியீட்டு நிகழ்வை மதியம் 12:30 மணிக்கு (நண்பகல்) புது தில்லியில் நடத்துகிறது. Honor 9X உடன், Honor Magic Watch 2 மற்றும் Honor Band 5i ஆகியவற்றை அந்த இடத்தில் அறிமுகப்படுத்துகிறது. Honor 9X கடந்த ஆண்டு ஜூலை மாதம் Honor 9X Pro-வுடன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதேபோல், Honor Magic Watch 2 மற்றும் Honor Band 5i ஆகியவை கடந்த ஆண்டு சீனாவில், சீன பிராண்டின் சமீபத்திய அணியக்கூடியவையாக அறிமுகமாயின.
Honor 9X, Honor Magic Watch 2, Honor Band 5i, லைவ் ஸ்ட்ரீம் விவரங்கள்:
Honor தனது சமூக ஊடக கணக்குகள் மற்றும் யூடியூப் மூலம் இந்தியாவில் Honor 9X, Honor Magic Watch 2 மற்றும் Honor Band 5i அறிமுகத்தின் நேரடி ஸ்ட்ரீமை ஹோஸ்ட் செய்கிறது. மதியம் 12:30 மணிக்கு நேரடி ஸ்ட்ரீம் தொடங்கும். கீழே பதிக்கப்பட்ட வீடியோவில் பிளே ஐகானைத் தட்டுவதன் மூலம் வெளியீட்டை நேரடியாகப் பிடிக்கலாம்.
இந்தியாவில் Honor 9X விலை இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இது கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிவிக்கப்பட்டதைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் ஆப்ஷனுக்கு CNY 1,399 (இந்திய மதிப்பில் ரூ. 14,400)-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, அதே நேரத்தில் அதன் 6GB RAM + 64GB சேமிப்பு மாடல் CNY 1,599 (இந்திய மதிப்பில் ரூ. 16,400) மற்றும் 6GB RAM + 128GB சேமிப்பு வேரியண்டின் விலை CNY 1,899 (இந்திய மதிப்பில் ரூ. 19,500)-யாக விலையிடப்படுள்ளது.
ஹானர் இந்தியாவில் Honor Magic Watch 2 மற்றும் Honor Band 5i ஆகியவற்றின் விலைகளை வெளியிடவில்லை. ஆனால், Honor 9X போலவே, அணியக்கூடிய இரண்டு பொருட்களும் கடந்த ஆண்டு சீனாவில் அறிவிக்கப்பட்டவற்றுக்கு ஏற்ப விலைக் குறிச்சொற்களைக் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. Honor Magic Watch 2 விலை அதன் 42mm வேரியண்டிற்குப் CNY 1,099 (இந்திய மதிப்பில் ரூ. 11,200)-ல் தொடங்குகிறது, மேலும் 46mm பதிப்பு CNY 1,199 (இந்திய மதிப்பில் ரூ. 12,200) விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இருப்பினும், Honor Band 5i, CNY 159 (இந்திய மதிப்பில் ரூ. 1,600)-க்கு விற்பனையாகிறது.
டூயல்-சிம் (நானோ) Honor 9X, EMUI 9.1 உடன் Android Pie-ல் இயங்குகிறது. இது 19.5:9 aspect ratio உடன் 6.59-inch full-HD+ (1080x2340 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த போன் 6GB RAM உடன் இணைக்கப்பட்டு, octa-core HiSilicon Kirin 810 SoC-யால் இயக்கப்படுகிறது. இதன் டூயல் கேமரா அமைப்பில், f/1.8 lens உடன் 48-megapixel பிரதான சென்சார் மற்றும் 2-megapixel depth சென்சார் ஆகியவை அடங்கும். மேலும், இது f/2.2 lens உடன் 16-megapixel செல்ஃபி கேமரா சென்சாருடன் வருகிறது.
Honor 9X, 64GB மற்றும் 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C port மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். இறுதியாக, இந்த போன் 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் side-mounted fingerprint சென்சாரைக் கொண்டுள்ளது.
Honor Magic Watch 2 அதன் 42mm வேரியண்டில், 1.2-inch circular AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. அதன் 46mm மாடல் 1.39-inch டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்வாட்ச் 4GB ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு, HiSilicon Kirin A1 SoC மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இது 5ATM நீர் எதிர்ப்புடன் வருகிறது மற்றும் இதய துடிப்பு மானிட்டர் மற்றும் ஜி.பி.எஸ் ஆதரவையும் கொண்டுள்ளது. எட்டு வெளிப்புற மற்றும் ஏழு உட்புற விளையாட்டு முறைகள், virtual pace-setter மற்றும் sleep disorder diagnosis போன்ற தனியுரிம அம்சங்களும் உள்ளன.
முழு அளவிலான ஸ்மார்ட்வாட்சாக வரும் Honor Magic Watch 2 போலல்லாமல், Honor Band 5i என்பது 0.96 inch (160x80 pixels) touchscreen டிஸ்பிளே கொண்ட உடற்பயிற்சி கைக்கடிகாரமாகும். இந்த பேண்ட் 91mAh பேட்டரியை பேக் செய்கிறது, இது ஒரே சார்ஜில் ஒன்பது நாட்கள் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், 5ATM நீர் எதிர்ப்பு உள்ளது. இந்த பேண்ட் ஒன்பது விளையாட்டு முறைகளைக் கொண்டுள்ளது மற்றும் Bluetooth v4.2 இணைப்பு மற்றும் 3-axis inertial சென்சார் மற்றும் இதய துடிப்பு சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்