இந்தியாவில், ஜனவரி 14-ஆம் தேதி Honor 9X வெளியாகிறது. Honor 9X இந்த மாத இறுதியில் நாட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று ஹானர் இந்தியா தலைவர் சார்லஸ் பெங் (Charles Peng) வெளிப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு, இந்த புதிய அறிவிப்புகள் வந்துள்ளன. சீன பிராண்ட் இந்த வார தொடக்கத்தில் தனது சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகத்தை கிண்டல் செய்தது. நினைவுகூர, Honor 9X கடந்த ஆண்டு ஜூலை மாதம் Honor 9X Pro-வுடன் சீனாவில் வெளியிடப்பட்டது. இரண்டு ஹானர் போன்களும் pop-up செல்பி கேமராவுடன் வருகின்றன.
ஹானர் அனுப்பிய Save the Date அழைப்பைத் தவிர, Honor 9X ஆன்லைனில் கிடைப்பதை பரிந்துரைக்க பிளிப்கார்ட் மைக்ரோசைட்டை வெளியிட்டுள்ளது. பிளிப்கார்ட்டுடன் சேர்ந்து, ஸ்மார்ட்போன் நாட்டின் பிற சேனல்கள் மூலம் வாங்குவதற்கு வாய்ப்புள்ளது.
இந்தியாவில் Honor 9X-ன் விலை இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இது கடந்த மாதம் சீன சந்தையில் அறிவிக்கப்பட்டவற்றுக்கு ஏற்ப இருக்கக்கூடும். இந்த ஸ்மார்ட்போனின் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் CNY 1,399 (சுமார் ரூ. 14,400) அறிமுகப்படுத்தப்பட்டது. அதன், 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடல் CNY 1,599 (சுமார் ரூ. 16,500)-யாகவும் மற்றும் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் CNY 1,899 (சுமார் ரூ. 19,600)-யாகவும் விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது.
Honor 9X-ன் விவரக்குறிப்புகள்:
Honor 9X, EMUI 9.1.1 உடன் Android Pie-ல் இயங்குகிறது. இது 6.59-inch full-HD+ (1080x2340 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 6GB RAM வரை இணைக்கப்பட்டு, octa-core HiSilicon Kirin 810 SoC-யால் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டூயல் ரியர் கேமரா அமைப்பில், f/1.8 lens உடன் 48-megapixel பிரதான சென்சார் மற்றும் 2-megapixel depth சென்சார் ஆகியவை அடங்கும். மேலும், இது f/2.2 lens உடன் 16-megapixel செல்ஃபி கேமரா சென்சாருடன் வருகிறது.
Honor, 64GB மற்றும் 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆப்ஷனையும் வழங்குகிறது. Honor 9X-ன் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C port மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். தவிர, இந்த போன் 4,000mAh பேட்டரி மற்றும் side-mounted fingerprint சென்சாரையும் கொண்டுள்ளது.
Honor Starts Teasing Honor 9X India Launch, Expected Soon
Honor 9X, Honor 9X Pro With 4,000mAh Battery, Kirin 810 SoC Launched: Price, Specifications
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்