4,000 எம்ஏஎச் பேட்டரியுடன் ஹானர் 30 சீரிஸ் அறிமுகம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 16 ஏப்ரல் 2020 14:47 IST
ஹைலைட்ஸ்
  • மூன்று போன்களும் 5G-ஐ ஆதரிக்கின்றன, மேஜிக் UI 3.1.10-ல் இயங்குகின்றன
  • ஹானர் 30 ப்ரோ, ஹானர் 30 ப்ரோ + கிரின் 990 SoC-யால் இயக்கப்படுகிறது
  • ஹானர் 30 கிரின் 985 SoC-யால் இயக்கப்படுகிறது, 8 ஜிபி ரேம் பேக் செய்கிறது

ஹானர் 30, 6.53 இன்ச் முழு எச்டி + டிஸ்பிளேவுடன் வருகிறது

ஹவாய் துணை பிராண்டிலிருந்து மூன்று போன்கள் அறிமுகம் - ஹானர் 30, ஹானர் 30 ப்ரோ மற்றும் ஹானர் 30 ப்ரோ +. இந்த ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் 21 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும். போன்களின் விலை மற்றும் விவரங்கள் பின்வருமாறு:


ஹானர் 30 விலை:

போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை சிஎன்ஒய் 2,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.32,400), 
8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை சிஎன்ஒய் 3,199 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.34,600) மற்றும் 
8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை சிஎன்ஒய் 3,499 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.37,800) ஆகும். 


ஹானர் 30 ப்ரோ விலை: 

போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை சிஎன்ஒய் 3,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.43,200) மற்றும் 
8 ஜிபி + 256 ஜிபி வேரியண்டின் விலை சிஎன்ஒய் 4,399 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.47,600) ஆகும்.


ஹானர் 30 ப்ரோ + விலை:

போனின் 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை சிஎன்ஒய் 4,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.54,100) மற்றும் 
12 ஜிபி + 256 ஜிபி ஆப்ஷனின் விலை சிஎன்ஒய் 5,499 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.59,500) ஆகும்.

இந்த மூன்று ஹானர் போன்களும் Magic Night Black, Wizard of Oz, Titanium Empty Silver மற்றும் Neon Purple கலர் ஆப்ஷன்களில் வருகிறது. இந்த போன்கள் ஏப்ரல் 21-ஆம் தேதி சீனாவில் விற்பனைக்கு வரும். ஆனால், இந்திய வெளியீடு குறித்து எந்த தகவலும் இல்லை.


ஹானர் 30 விவரங்கள்:

ஹானர் 30, 6.53 இன்ச் முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) ஹோல்-பஞ்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது, மேஜிக் யுஐ 3.1.1-ல் இயங்குகிறது. இந்த போன், கிரின் 985 SoC-யால் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

போனின் குவாட் கேமரா அமைப்பில், 40 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா, 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், 32 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. ஹானர் 30, 40W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. 

ஹானர் 30 ப்ரோ மாடலின் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு உள்ளது

ஹானர் 30 ப்ரோ விவரங்கள்:

ஹானர் 30 ப்ரோ, 6.57 இன்ச் முழு எச்டி + (1,080x2,340 பிக்சல்கள்) டூயல் துளை-பஞ்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் கிரின் 990 SoC-யால் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

போனின் பின்புற டிரிபிள் கேமரா அமைப்பில், 40 மெகாபிக்சல் சூப்பர் சென்சிட்டிவ் கேமரா, 16 மெகாபிக்சல் சூப்பர் வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும். போனின் டூயல் செல்பி கேமரா அமைப்பில், 32 மெகாபிக்சல் செல்பி கேமராவும், 8 மெகாபிக்சல் செல்பி கேமராவும் உள்ளன. மற்ற அனைத்து விவரங்களும் ஹானர் 30 போனுடன் இணையானவை.

ஹானர் 30 ப்ரோ + விவரங்கள்:

ஹானர் 30 ப்ரோ +, 6.57 இன்ச் ஃபுல்-எச்டி + (1,080x2,340 பிக்சல்கள்) டூயல் ஹோல்-பஞ்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது, 12 ஜிபி ரேம் வரை பேக் செய்கிறது. 

Advertisement

ஹானர் 30 ப்ரோவைப் போல மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் பிரதான கேமராவில் 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 700 சென்சார் உள்ளது. இந்த போன், 40W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 27 வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கையும் வழங்குகிறது. 

 
KEY SPECS
Display 6.53-inch
Processor HiSilicon Kirin 985
Front Camera 32-megapixel
Rear Camera 40-megapixel + 8-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
 
NEWS
KEY SPECS
Display 6.57-inch
Processor HiSilicon Kirin 990
Front Camera 32-megapixel + 8-megapixel
Rear Camera 40-megapixel + 16-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
 
NEWS
KEY SPECS
Display 6.57-inch
Processor HiSilicon Kirin 990
Front Camera 32-megapixel + 8-megapixel
Rear Camera 50-megapixel + 16-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Nothing Phone 4a இந்தியாவில் அறிமுகம் – Glyph Bar Interface உடன்; Nothing Phone 4a Proவும் வெளியீடு
  2. Local Times OTT வெளியீடு: தமிழ் காமெடி டிராமா தொடரை எப்போது, எங்கே பார்க்கலாம்?
  3. OnePlus 15T – 1.5K 165Hz டிஸ்ப்ளே வரலாம்; முக்கிய அம்சங்களை நிறுவனம் உறுதி செய்தது
  4. Samsung Galaxy ஸ்மார்ட்போன் விலைகள் இந்தியாவில் உயர்வு – பல மாடல்கள் பாதிப்பு
  5. Motorola Edge 70 Fusion இந்தியாவில் அறிமுகம்.. அரசவைக்கு சிறப்பு அம்சங்கள்
  6. MacBook Neo அதிகாரப்பூர்வமாக அறிமுகம்: பட்ஜெட் விலை, நான்கு நிறங்கள் மற்றும் பல அம்சங்கள
  7. Google Pixel 10 சலுகை: ₹13,800-க்கும் அதிக தள்ளுபடி – எப்படி பெறுவது?
  8. Xiaomi 17T இந்தியாவில் வெளியாகும் நாள் இதுவா? Xiaomi 17 Ultra இந்தியாவில் அறிமுகமாக தயாராகிறது
  9. விவோ X300 FE Snapdragon 8 Gen 5, 50MP Telephoto Camera உடன் அறிமுகம்
  10. மார்ச் 5ல் அறிமுகமாகும் முன் Nothing Phone 4a சீரிஸ் விலை வெளியானது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.