அதிரடி விலைக் குறைப்பில் Honor 20!

அதிரடி விலைக் குறைப்பில் Honor 20!

Honor 20, hole-punch டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • Honor 20 முதலில் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வந்தது
  • ஹானர் போன் ரூ. 32,999 விலைக் குறியீட்டுடன் அறிமுகமானது
  • இந்தியாவில் Honor 20i விலையும் குறிப்பிட்ட காலத்திற்கு குறைக்கபட்டுள்ளது
விளம்பரம்

Honor 20 அமேசான் இந்தியா வழியாக நவம்பர் 26 முதல் விற்பனைக்கு வர உள்ளது. ஜூன் மாதத்தில் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் இதுவரை பிளிப்கார்ட் மூலம் வாங்குவதற்கு கிடைத்தது. இருப்பினும், ஹவாய் துணை பிராண்ட் ஹானர் இப்போது ஆன்லைன் சந்தையின் மூலம் Honor 20-ஐ விற்பனை செய்வதற்காக அமேசான் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதே நேரத்தில், அதன் விலை குறைக்கப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக, தள்ளுபடியுடன் நவம்பர் 29 வரை Honor 20 கிடைக்கும். Honor 20i ஒரு சிறப்பு விலையையும் பெற்றுள்ளது. இது நவம்பர் 30 வரை செல்லுபடியாகும்.


இந்தியாவில் Honor 20-யின் விலை, விற்பனை சலுகைகள்:

இந்தியாவில் Honor 20-யின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 32,999-யாக ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் விலை குறைப்பை பெற்றுள்ளதோடு, பிளிப்கார்ட் மூலம் ரூ. 24.999-க்கு வாங்குவதற்கு கிடைக்கிறது. இது அமேசான் இந்தியா வழியாகவும் அதே விலையில் விற்பனைக்கு வரும். மேலும், ரூ. 2,000 கூடுதல் தள்ளுபடியானது நவம்பர் 26 முதல் நவம்பர் 29 வரை அமேசான் இந்தியாவுக்கு பொருந்தும் என்று ஹானர் அறிவித்துள்ளது. இது ரூ. 22.999-யாக விலைக் குறைப்பைக் கொண்டுவரும்.

அமேசான் இந்தியா வழியாக விற்பனை நடைபெறுவதைத் தொடர்ந்து, Honor 20 பிளிப்கார்ட் மூலம் வாங்குவதற்கு தொடர்ந்து கிடைக்குமா என்பது தெளிவாக இல்லை. தெளிவுக்காக நாங்கள் ஹானரை அணுகியுள்ளோம், மீண்டும் அறிவிப்பு வந்தவுடன் இந்த இடத்தை புதுப்பிப்போம்.

நினைவுகூர, Honor 20i மற்றும் Honor 20 Pro-வுடன் Honor 20 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொலைபேசி Midnight Black மற்றும் Sapphire Blue வண்ண விருப்பங்களில் வருகிறது.

Honor 20i-யின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 14,999-க்கு கிடைக்கிறது. இது நவம்பர் 30 வரை ரூ. 10,999-யாக சிறப்பு விலையை பெறுகிறது. இந்த சிறப்பு விலை ஆரம்பத்தில் பிளிப்கார்ட்டுக்கு பொருந்தும், அமேசான் இந்தியா இன்னும் மாற்றங்களை பிரதிபலிக்கவில்லை.


Honor 20-யின் விவரக்குறிப்புகள்:

டூயல்-சிம் (நானோ) Honor 20, Magic UI 2.1 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. ஸ்மார்ட்போனில் hole-punch வடிவமைப்பு மற்றும் 19.5:9 aspect ratio உடன் 6.26-inch full-HD+ (1080x2340 pixels) All-View டிஸ்பிளே அம்சத்தைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், 6GB RAM உடன் இணைக்கப்பட்ட octa-core HiSilicon Kirin 980 SoC உள்ளது.

Honor 20-யில் f/1.8 lens உடன் 48-megapixel முதன்மை சென்சார், f/2.2 aperture உடன் 117-degree super-wide-angle லென்ஸோடு 16-megapixel இரண்டாம் நிலை சென்சார் மற்றும் f/2.4 lens உடன் 2-megapixel depth சென்சார் மற்றும் f/2.4 macro lens உடன் 2-megapixel சென்சார் ஆகியவற்றுடன் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32-megapixel செல்பி கேமரா சென்சார் உள்ளது. இது f/2.0 lens மற்றும் 3D Portrait Lighting ஆதரவுடன் வருகிறது.

The Honor 20 has 128GB of onboard storage that isn't expandable via microSD card. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். இதில் side-mounted fingerprint சென்சார் உள்ளது. தவிர, இந்த போன் 3,750mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 154.60x73.97x8.44mm அளவீட்டையும் கொண்டதாகும்.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Super performance
  • Excellent battery life
  • Attractive design
  • Lots of camera features
  • Bad
  • Inconsistent camera performance
  • Lacks fast charging
Display 6.26-inch
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 16-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3750mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »