விரைவில் வருகிறது ஹானர் 10 லைட்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 14 நவம்பர் 2018 10:11 IST
ஹைலைட்ஸ்
  • ஹானர் 10 லைட் நவ.21 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
  • இதில் இரட்டை கேமிரா உள்ளது.
  • பின்புறம் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளது.

ஹானர் 10 லைட் பல்வேறு நிறங்களில் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Photo Credit: Weibo

ஹூவாயின் துணை நிறுவனமான ஹானர் அதன் முன்னணி தயாரிப்பான ஹானர் 10-ஐ ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டது. இந்தியாவில் மே மாதம் விற்பனைக்கு வந்தது. இப்போது சில மாறுதல்களை செய்து நவம். 21 ஆம் தேதி சீனாவில் வெளியிடப்போவதாக ஹானர் அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்ட தேதியில் பிஜிங்கில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த ஹூவாய் முடிவு செய்துள்ளது. அப்போது ஹானர் 10 லைட் வெளிவரும் தேதி குறித்து அறிவிக்கப்படும். அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் டீசர் போஸ்டர் போனின் பின்புறத்திலிருக்கும் முக்கியம்சத்தை காட்டியுள்ளது. அது ஹானர் 10 உடன் ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டது.

Advertisement

ஹானர் நிறுவனம், சீன சமூக வலைதளம் ஒன்றில் ஹானர் 10 லைட் நவம். 21 ஆம் தேதி வெளிவர இருக்கும் செய்தியை பதிவிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஒன்றின் கீழ் ஒன்றாக இரு கேமிராக்கள் அமைந்துள்ளது. பின்புற ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் இரட்டை நிறத்திலான பின்புறத்தை கொண்டுள்ளது.

ஹானர் 10 லைட்டின் பின்புறம், ஹானர் நோட் 10, ஹானர் 8எக்ஸ் மற்றும் ஹானர் 8சியின் தூண்டுதலால் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஹானர் 10 லைட் போஸ்டரில் போனின் முன்புற தோற்றம் காட்டப்படவில்லை இதனால் ஹானர் 10 லைட்டில் டிஸ்பிளே நாட்ச் உள்ளதா? இல்லையா? என்று தெரியவில்லை. அடுத்த வாரத்தில் ஹானர் 10 லைட் அறிமுகப்படுத்தப்படும்போது மற்ற தகவல்கள் வெளிவரும்.


 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Honor 10 Lite, Honor 10 Lite Price, Honor 10 Lite Specifications, Honor
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.