Android 10 அப்டேட் பெறும் Honor 10 Lite!

Android 10 அப்டேட் பெறும் Honor 10 Lite!

Honor 10 Lite Android 10 அப்டேட் டார்க் மோடை கொண்டுவருகிறது

ஹைலைட்ஸ்
  • அப்டேட் மேம்படுத்தப்பட்ட UI, magazine-style lock screen-ஐ கொண்டுவருகிறது
  • Honor 10 Lite பயனர்கள் HiCare செயலி வழியாகவும் அப்டேட் செய்ய முடியும்
  • அப்டேட் புதிய animations, multi-screen collaborations-ஐக் கொண்டுவர
விளம்பரம்

Honor 10 Lite பயனர்கள் இந்தியாவில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பெறுவதாக கூறப்படுகிறது. இந்த அப்டேட், பதிப்பு EMUI 10.0.0.159 (C675E17R1P3) உடன் வருகிறது. மேலும், இந்தியாவில் இந்த அப்டேட்டின் அளவு சுமார் 3.56GB ஆகும். அப்டேட் அளவு பெரிதாக இருப்பதால், பயனர்கள் அப்டேட்டை வலுவான வைஃபை இணைப்பின் கீழ் பதிவிறக்கம் செய்ய வேண்டும். போன் சார்ஜில் இருக்கும் போது அதை இன்ஸ்டால் செய்ய பரிந்துரைக்கிறோம். நீங்கள் இதுவரை அறிவிப்பைப் பெறவில்லை எனில், OTA அப்டேட்டை பெற்றுள்ளீர்களா இல்லையா என்பதை Settings-ல் மேனுவலாக பார்க்கவும். பயனர்கள் HiCare செயலி வழியாகவும் மேம்படுத்தலாம்.

Honor 10 Lite-க்கான ஆண்ட்ராய்டு 10-அடிப்படையிலான EMUI 10 ரோல்அவுட்டை முதலில் RPRNA அறிவித்தது. மேலும், இந்தியாவில் பயனர்கள், அப்டேட்டைப் பெறுகிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது. இந்த அப்டேட்டுக்கான பீட்டா சோதனை கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கியது. இப்போது நிறுவனம் நிலையான ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை இரண்டு மாதங்கள் சோதித்தபின் வெளியிடுகிறது. நாட்டிலுள்ள மன்றங்களில் EMUI 10 அப்டேட்டின் வருகையை பயனர்கள் உறுதி செய்கின்றனர். சமீபத்திய அப்டேட் new animation, dark mode, improved UI, magazine-style lock screen மற்றும் பலவற்றைக் கொண்டுவருகிறது. இது multi-screen collaboration தொடர்பான புதிய புதிய திறன்களைக் கொண்டுவருகிறது. மேலும், rones, televisions, smartwatches மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பிற சாதனங்களுடன் போன்களைத் தடையின்றி தொடர்பு கொள்ள உதவுகிறது. புதிய UI கூறுகளுக்கு கூடுதலாக,  ஹவாய் நிறுவனத்தின் AHuawei's Android Auto replacement-ஆன - HiCar-ஐயும் EMUI 10 கொண்டுவருகிறது.

அப்டேட்டின் அளவு 3.56 ஜிபி என்று குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே நீங்கள் சின்ஸ்டலேஷன் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன்பு சிறிது இடத்தை விடுவிக்க பரிந்துரைக்கிறோம். Settings > System > Software update > Check for Updates > Download and install. நீங்கள் இதுவரை அதைப் பெறவில்லை என்றால், அதை வரும் நாட்களில் பார்க்க வேண்டும். HiCare செயலியை பயன்படுத்தியும் புதுப்பிக்கலாம். செயலியை திறந்து, Me Section > Settings > Check for Updates. நீங்கள் HiCare செயலியின் சமீபத்திய பதிப்பில் இருப்பதை உறுதிசெய்க.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Decent performance
  • Good battery life
  • Bad
  • Average cameras
  • Camera AI isn’t useful
  • Lacks fast charging
Display 6.21-inch
Processor HiSilicon Kirin 710
Front Camera 24-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3400mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Honor 10 Lite, Honor 10 Lite Update, EMUI 10, Android 10
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »