குடியரசு தினத்திற்கு முன்னதாக, பிளிப்கார்ட் தனது ஈ-காமர்ஸ் தளங்களில் மற்றொரு விற்பனையுடன் திரும்பியுள்ளது. பிளிப்கார்ட்டின் குடியரசு தின விற்பனை, இன்று ஆன்லைன் ஷாப்பிங் தளத்தின் பிளஸ் உறுப்பினர்களுக்குத் தொடங்க உள்ளது. இது நாளை அனைவருக்கும் விரிவடையும். இது ஸ்மார்ட்போன்கள், அணியக்கூடியவை மற்றும் பிற சாதனங்களில் வரையறுக்கப்பட்ட நேர விலைக் குறைப்பு மற்றும் பிற சலுகைகளை வழங்கும். பிளிப்கார்ட்டின் குடியரசு தின விற்பனையின் போது, Asus, Realme மற்றும் Huawei ஆகியவை போன்கள் மற்றும் பாகங்களில் உள்ள சலுகைகளை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளன. விற்பனை மற்றும் நீங்கள் பார்க்க வேண்டிய சில சலுகைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
பிளிப்கார்ட்டின் குடியரசு தின விற்பனை, பிளஸ் சந்தாதாரர்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும். மற்ற அனைவருக்கும், இது நாளை (ஜனவரி 19) தொடங்கி, ஜனவரி 22 வரை நடைபெறும். நீங்கள் பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினராக இருந்தால், சலுகைகளுக்கான ஆரம்ப அணுகலைப் பெறுவீர்கள். இது நல்ல ஒப்பந்தங்களில் உங்களுக்கு சில நன்மைகளைத் தருகிறது.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, பிளிப்கார்ட் கடைக்காரர்கள் பல்வேறு பிரிவுகளில் பரவலான தயாரிப்புகளில் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளைப் பெறலாம். ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கினால், 10 சதவீதம் உடனடி தள்ளுபடியை வழங்கப்போவதாக பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. மேலும், Axis Bank, HDFC Bank, ICICI Bank மற்றும் SBI வாடிக்கையாளர்களுக்கு no-cost EMI ப்ளான்களையும் பிளிப்கார்ட் வழங்கும்.
Realme தனது போன்களின் விலையை விற்பனையின் போது ரூ. 2,000 வரை குறைக்கும் மற்றும் தள்ளுபடி விலை புள்ளிகளிலும் பாகங்கள் வழங்கப்படும். Realme 5 Pro ரூ. 1,000 மதிப்புள்ள விலைக் குறைப்பை பெறும். மேலும், இந்த போன் ரூ. 13.999-க்கு கிடைக்கும். Realme X மற்றும் Realme XT இரண்டும் ரூ. 2,000 தள்ளுபடியைப் பெறும். மேலும், பிளிப்கார்ட்டின் குடியரசு தின விற்பனையின் போது ரூ. 14,999-க்கு வாங்கலாம். Realme Buds 2 மற்றும் Realme Buds Wireless தலா ரூ. 499 மற்றும் ரூ. 1,599-க்கு விற்பனை செய்யப்படும்.
பிளிப்கார்ட், Asus 6Z-ல் ரூ. 3,000 மதிப்புள்ள எக்ஸ்சேஞ் ஆஃபர் மற்றும் no-cost EMI உடன் ரூ. 4,000 தள்ளுபடியை வழங்குகிறது. இதன் 6GB + 64GB வேரியண்ட் ரூ. 27,999-க்கு கிடைக்கும். அதன் முன்னோடி, Asus 5Z, ரூ. அடிப்படை வேரியண்டை ரூ. 15,999-க்கு வாங்கலாம். Asus Max M2 மற்றும் Asus Max Pro M1 இரண்டும் no-cost EMI மற்றும் வங்கி தள்ளுபடிகள் ரூ. 6,999-க்கு விற்கப்படும்.
Huawei பொறுத்தவரை, Huawei Watch GT 2-வின் விலையில் ரூ. 1,000 தள்ளுபடி செய்யப்படுள்ளது. Huawei Watch GT, ரூ. 2,000 மதிப்புள்ள தள்ளுபடியை பெறுகிறது. MediaPad M5 Lite tablet-க்கு ரூ. 3,000 வரையறுக்கப்பட்ட நேர விலைக் குறைப்புடன், ரூ. 17.990-க்கு கிடைக்கும். Huawei P30 Lite's விலை ரூ. 7,000-யாக குறைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இதனை ரூ. 12,990-க்கு வாங்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்