Photo Credit: Gadgets 360
Nothing நிறுவனத்துக்கு சொந்தமான CMF பிராண்டு புதிதாக மூன்று முக்கியமான சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் CMF Phone 1 சாதனத்துடன், CMF Buds Pro 2 மற்றும் CMF Watch Pro 2 போன்ற சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் CMF Phone 1 வசதிகள் அசர வைக்கிறது.
ஒன்றுக்கொன்று மாற்றக்கூடிய பின்புற அட்டையுடன் தனித்துவமான வடிவமைப்புடன் வந்துள்ளது. MediaTek Dimensity 7300 5G SoC சிப் மூலம் இயங்குகிறது. 120Hz அடாப்டிவ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் இரட்டை 50 மெகாபிக்சல் கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது. இது IP52 மதிப்பபீட்டை கொண்டுள்ளது.
வயர்டு மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆகிய இரண்டு வசதி கொண்ட 5,000mAh பேட்டரி உள்ளது.
6ஜிபி ரேம்+ 128ஜிபி சேமிப்பு 15,999 ரூபாய்
8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு 17,999 ரூபாய்
இது கருப்பு, நீலம், வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. Flipkart மற்றும் CMF இந்தியா இணையதளம் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கிறது. மொபைலை வாங்கும் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு CMF Buds இலவசம்.
டூயல் சிம் வசதியுடன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.6 மூலம் இயக்குகிறது. இரண்டு வருடதிற்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கிறது. 6.7-இன்ச் முழு HD+ (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED LTPS டிஸ்ப்ளே 120Hz 2000 nits உச்ச பிரகாசத்தை தருகிறது.
ரேம் பூஸ்டர் அம்சத்துடன் வந்துள்ள CMF Phone 1செல்போனில் நினைவகத்தை கிட்டத்தட்ட 16ஜிபி வரை விரிவாக்க முடியும். 50 மெகாபிக்சல் முதன்மைக் கேமராவும், Sony சென்சாரும், எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) மற்றும் 2x ஜூம் கொண்ட போர்ட்ரெய்ட் சென்சார் ஆகியவையும் உள்ளன. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.
256GB வரை உள்ளடங்கிய சேமிப்பகத்தை வழங்குகிறது. இதனை 2TB வரை விரிவாக்க முடியும். 5G, 4G LTE, Wi-Fi 6, ப்ளூடூத் 5.3 மற்றும் USB Type-C போர்ட் உள்ளது. ஆப்டிகல் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP52 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதி உள்ளது. 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் பேட்டரி நீடிக்கிறது. 20 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் ஏறிவிடுகிறது. 197 கிராம் எடை கொண்டது.
CMF Phone 1 செல்போனின் பின் கேஸை விரும்பிய வண்ணங்களில் மாற்றலாம். பாகங்களை சேர்க்கலாம். ப்ளூ மற்றும் ஆரஞ்சு பின்புற பேனல்களை நிறுவனமே கொடுக்கிறது. இது செல்போனின் எடையை சற்று அதிகரிக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்